4 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் திரும்பினார் பர்வேஸ் முஷாரப்!

Subscribe to Oneindia Tamil

Pervez Musharraf
இஸ்லாமாபாத்: தலிபான்களின் மிரட்டலையும் மீறி பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் அறிவித்தபடி இன்று அந்நாட்டுக்குத் திரும்பியுள்ளார்.

பாகிஸ்தானில் 1999 ஆம் ஆண்டு ராணுவப் புரட்சி மூலம் அதிபரானார் பர்வேஸ் முஷாரப். அவர் ஆட்சிக் காலத்தில் பெனாசிர் புட்டோ படுகொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில் முஷாரப் பெயரும் சேர்க்கப்பட்டிருக்கிறது. அவர் மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானை விட்டு அவர் வெளியேறினார். சவூதி அரேபியா மற்றும் இங்கிலாந்தில் அவர் தஞ்சமடைந்தார்.

இந்நிலையில் மே 11-ந் தேதி பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இத் தேர்தலில் தாமும் பங்கேற்பதால் நாடு திரும்புவேன் என்று முஷாரப் அறிவித்திருந்தார். அத்துடன் தம் மீதான வழக்குகளில் முன் ஜாமீனும் பெற்றிருந்தார். அதே நேரத்தில் அவர் பாகிஸ்தான் திரும்பினார் கொலை செய்யப்படுவார் என்று தலிபான்கள் எச்சரித்திருந்தனர்.

இன்று துபையில் இருந்து விமானம் மூலம் பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு முஷாரப் வந்தடைந்துள்ளார். இதனால் பாகிஸ்தானில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+