Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2ஜி: அட்டர்னி ஜெனரல் மீது ராசா கடும் தாக்கு!; மத்திய அரசுக்கு திமுக புதிய நெருக்கடி!!

Subscribe to Oneindia Tamil

A.Raja
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக பின்னணியில் நடைபெற்ற தகவல்களை நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் (ஜேபிசி) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தனக்கு வாய்ப்புத் தர வேண்டும் என்று முன்னாள் தொலை தொடர்புத்துறை அமைச்சர் அ. ராசா கடிதம் மூலம் வலியுறுத்தியது வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் அட்டர்னி ஜெனரல் கூலம் இ. வாகனவதி தவறான தகவலை கூறியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

2ஜி ஸ்பெக்டம் ஒதுக்கீடு விவகாரத்தில் எழுந்த முறைகேடு தொடர்பான ஜேபிசி அறிக்கை நாடாளுமன்றத்தில் மே மாதம் தாக்கல் செய்யப்படும் என்று குழுவின் தலைவர் பி.சி. சாக்கோ கடந்த 23-ம் தேதி கூறினார்.

அந்த அறிக்கையில் ராசாவின் எழுத்துப்பூர்வ விளக்கத்தைப் பதிவு செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். ஆனால், ராசா என்ன கூறினார் என்பதை வெளியிட சாக்கோ மறுத்து விட்டார்.

இந்த நிலையில், சாக்கோவுக்கு ராசா எழுதிய 17 பக்க கடிதத்தின் விவரம் தெரிய வந்துள்ளது. சாக்கோ எழுப்பிய ஐந்து கேள்விகளுக்கான பதிலை ஐந்து பக்கங்களில் தனியாகவும், அட்டர்னி ஜெனரலின் வாக்குமூலம், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுப் பின்னணியை விவரிக்கும் நிகழ்வுகளை 12 பக்கங்களிலும் ராசா விவரித்துள்ளார்.

2007-ம் ஆண்டில், 2ஜி அலைக்கற்றை உரிமங்கள் கேட்டும், கூடுதல் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யக் கோரியும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன.

இது தொடர்பான வழக்கை மத்திய தொலைத்தொடர்பு வழக்குகள் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் (டிடிசாட்) 2007 அக்டோபரில் விசாரித்தது.

சொலிசிட்டர் ஜெனரல் ஆஜர்

அந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் அப்போதைய சொலிசிட்டர் ஜெனரல் (கூலம் இ. வாகனவதி) ஆஜராகி வந்தார். அந்த அடிப்படையில் அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து, அப்போதைய வெளியுறவு அமைச்சர் (பிரணாப் முகர்ஜி), சொலிசிட்டர் ஜெனரல் ஆகியோருடன் 2007 டிசம்பரில் ஆலோசனை நடத்தினேன்.

செய்திக்குறிப்பில் திருத்தம்

அப்போது தனது கருத்தை விளக்கி வெளியுறவு அமைச்சரிடம் சொலிசிட்டர் ஜெனரல் ஒரு குறிப்பை அளித்தார். அதை பிரதமருக்கு வெளியுறவு அமைச்சர் அனுப்பி வைத்தார். அந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, தொலைத்தொடர்புக் கொள்கை முடிவுகள் குறித்து பிரதமருக்கு 2007 டிசம்பர் 26-ம் தேதி உள்ளிட்ட பல்வேறு தேதிகளில் கடிதங்களை எழுதினேன். அந்தப் பின்னணியில்தான் அலைக்கற்றை விண்ணப்பங்கள் பரிசீலனை தொடர்பாக 2008 ஜனவரி 7-ம் தேதியிட்ட குறிப்பை மத்திய தொலைத்தொடர்புத் துறையினர் தயாரித்தனர். மத்திய தொலைத்தொடர்புத் துறையின் கொள்கை தொடர்பான கருத்தை அறிவதற்காகத்தான், சொலிசிட்டர் ஜெனரலின் பார்வைக்கு அந்தச் செய்திக்குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டது.

அதில், "குறிப்பைப் பார்த்து விட்டேன்; எல்லாம் வெளிப்படையாகவும் நியாயமான முறையிலும் உள்ளன' என்று அவர் குறிப்பு எழுதியிருந்தார். முன்னதாக, அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான தொலைத்தொடர்புத் துறையினர் தயாரித்த குறிப்புக்கு நான் ஒப்புதல் தெரிவித்தேன்.

அப்போது, அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக பிரதமரிடம் நான் கூறியதற்கு முரணாக வரைவுச் செய்திக்குறிப்பின் கடைசி பத்தி இருப்பது தெரியவந்தது.

வானகவதி கூறுவது பொய்

அதனால், "திருத்தப்பட்ட செய்திக்குறிப்பு' என்ற வாசகத்தை அதில் நான் எனது கைப்பட பேனாவில் எழுதினேன்.

அதன் பிறகு மத்திய தொலைத்தொடர்புத் துறைச் செயலர் மூலம் அந்த வரைவுச் செய்திக்குறிப்பு சொலிசிட்டர் ஜெனரலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனவே, சொலிசிட்டர் ஜெனரலாக இருந்தவர் தற்போது கூறுவது போல, அவர் பார்வையிட்ட பிறகு வந்த குறிப்பில் நான் திருத்தம் செய்ததாகக் கூறுவது தவறாகும்.

சொலிசிட்டர் ஜெனரலிடம் சிபிஐ விசாரித்தபோது, 2007 டிசம்பரில் வெளியுறவு அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தைப் பற்றி அவர் எதுவும் கூறவில்லை. அந்தக் கூட்டம் தொடர்பான குறிப்பு வெளியான பிறகுதான், அந்த நிகழ்வு நடைபெற்றதை சொலிசிட்டர் ஜெனரல் நினைவு கூர்ந்தார். அப்போதும் கூட அந்தக் கூட்டம் முத்தரப்பாக அல்லாமல் வெளியுறவு அமைச்சருடன் அவரும் நானும் தனித்தனியாகப் பேசியதாக வாகனவதி கூறினார்.

ஆனால், அவர் கூறியதற்கு முரணாக, நாடாளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவுக்கு அனுப்பிய கடிதத்தில் முத்தரப்புக் கூட்டம் நடைபெற்றதை வெளியுறவு அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

மேலும் உச்ச நீதிமன்றம், தில்லி உயர் நீதிமன்றம், தொலைத்தொடர்புத் தீர்ப்பாயம் ஆகியவற்றில் ஒருமுறை கூட மத்திய தொலைத்தொடர்புத் துறையின் வரைவுச் செய்திக்குறிப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் தனக்குத் தெரியாமல் நடைபெற்றது என வாகனவதி கூறவில்லை. இந்த உண்மையை தற்போது அவர் மறைப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

விளக்கம் தர விருப்பம்

அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான செய்திக் குறிப்பு விவகாரம் மட்டுமின்றி அலைக்கற்றை நுழைவுக் கட்டணம், அலைக்கற்றைக் கட்டணம், விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் நிர்ணயம், கூடுதல் அலைக்கற்றை அனுமதிக்கான நடைமுறை, இரட்டை தொழில்நுட்ப அனுமதி வழங்குதல் போன்ற பல நடவடிக்கைகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை.

அலைக்கற்றை விண்ணப்பதாரர்களின் தகுதியை நிர்ணயிப்பது தொடர்பான விவகாரத்தில் கூட சொலிசிட்டர் ஜெனரல் கூறிய கருத்தை நாம் கவனிக்க வேண்டும்.

இதுபோன்ற பல விஷயங்களின் பின்னணியை நேரில் விளக்க விரும்புகிறேன். எனவே, நாடாளுமன்றத்தில் ஜேபிசி அறிக்கை தாக்கல் செய்யப்படும் முன்பு இந்த உண்மைகளை நேரில் விளக்க எனக்கு வாய்ப்புத் தர வேண்டும் என்று தனது கடிதத்தில் ராசா கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+