சஞ்சய் தத்தை விடுவிக்கக் கோரி மகாராஷ்டிரா ஆளுநரை சந்திக்கும் ஜெயபிரதா, அமர்சிங்
மும்பை: நடிகையும், எம்.பி.யுமான ஜெயபிரதா மற்றும் அமர்சிங் ஆகியோர் 1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை விடுவிக்கக் கோரி மகாராஷ்டிரா மாநில ஆளுநரை சந்தித்து பேசிவிருக்கின்றனர்.
1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு தடா நீதிமன்றம் அளித்த 6 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் 5 ஆண்டுகளாக குறைத்து கடந்த வாரம் தீர்ப்பளித்தது. சஞ்சய் ஏற்கனவே 18 மாதங்கள் சிறையில் இருந்துவிட்டு ஜாமீனில் வெளியே வந்ததால் அவர் தற்போது 3 ஆண்டுகள் 5 மாதம் சிறையில் இருக்க வேண்டும்.
அதன்படி சஞ்சய் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பத்திரிக்கை கவுன்சில் தலைவரும், முன்னாள் நீதிபதியுமான மார்கண்டேய கட்ஜு மாநில ஆளுநர் தன்னுடைய சிறப்பு அதிகாரத்தை வைத்து சஞ்சய் தத்தை சிறை தண்டனையில் இருந்து விடுவிக்க முடியும் என்று கூறினார். இதையடுத்து சஞ்சய் தத்தை விடுவிக்கக் கோரி நடிகையும், லோக்சபா எம்.பி.யுமான ஜெயபிரதா மற்றும் சமாஜ்வாடி கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அமர் சிங் ஆகியோர் மகாராஷ்டிரா மாநில ஆளுநரை இன்று சந்தித்து பேசவிருக்கின்றனர்.
அவர்கள் இன்று மாலை 6.45 மணிக்கு ஆளுநரை சந்திக்கக்கூடும் என்று ராஜ்பவன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று பாலிவுட் நட்சத்திரங்களும், அரசியல் தலைவர்களுமான சத்ருகன் சின்ஹா மற்றும் ஜெயா பச்சன் ஆகியோர் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications