மகாராஷ்டிரா, தமிழகத்தைத் தொடர்ந்து குஜராத்திலும் எம்.எல்.ஏக்கள் கூண்டோடு சஸ்பென்ட்

Subscribe to Oneindia Tamil

மும்பை/சென்னை/அகமதாபாத்: 'எம்.எல்.ஏக்கள் சஸ்பென்ட்' காலம் என்பதைப் போல பல மாநிலங்களில் அதுவும் கூண்டோடு சஸ்பென்ட் ஆவது தொடர் கதையாகி வருகிறது.

சட்டசபைகளில் எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபடுவதும் சபை காவலர்களால் வெளியேற்றப்படுவது அல்லது குண்டு கட்டாகத் தூக்கி எறிவது என்பது காலந்தோறும் நிகழ்ந்து வரும் சம்பவங்களே. இதேபோல் அரிதினும் அரிதாக ஒரு சில எம்.எல்.ஏக்கள் அந்த கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பென்ட் செய்யப்படுகிற நடைமுறையும் இருந்து வந்தது.

தற்போது எல்லாவற்றிலும் மாற்றம் வந்து 'அப்டேட்' ஆகிவிட்டது அல்லவா? இந்த எம்.எல்.ஏக்கள் சஸ்பென்ட் விவகாரத்திலும் அப்டேட் இல்லாமலா போய்விடும். இப்பொழுது கூண்டோடு சஸ்பென்ட் ஆவது பேஷன் போல..

மகாராஷ்டிராவில் 5 பேர் டிச.31 வரை சஸ்பென்ட்

மகாராஷ்டிராவில் 5 பேர் டிச.31 வரை சஸ்பென்ட்

மகாராஷ்டிரா சட்டசபை வளாகத்தில் சில நாட்களுக்கு போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சூர்யவன்சியை எம்.எல்.ஏக்கள் 5 பேர் கூட்டாக சேர்ந்து தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் கிஸ்ஜித் தாகூர் உட்பட 5 பேரையும் டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை சஸ்பென்ட் செய்யப்பட்டனர். இன்னமும் மகாராஷ்டிரா சட்டசபையில் இந்த விவகாரம் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் 6 எம்.எல்.ஏக்கள் 6 மாத சஸ்பென்ட்

தமிழகத்தில் 6 எம்.எல்.ஏக்கள் 6 மாத சஸ்பென்ட்

தமிழக சட்டசபையில் கடந்த மாதம் அதிருப்தி எம்.எல்.ஏக்களை தாக்கியதாக பார்த்தசாரதி, முருகேசன் உள்ளிட்ட 6 தேமுதிக எம்.எல்.ஏக்கள் நேற்று ஒரு ஆண்டுக்கு சஸ்பென்ட் செய்யப்பட்டனர். இதற்கு அனைத்து கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத் தொடர்ந்து 6 தேமுதிக எம்.எல்.ஏக்களின் சஸ்பென்ட் காலம் 6 மாத காலமாகக் குறைக்கப்பட்டது.

இன்று குஜராத்தில் 54 எம்.எல்.ஏக்கள் ஒருநாள் சஸ்பென்ட்

இன்று குஜராத்தில் 54 எம்.எல்.ஏக்கள் ஒருநாள் சஸ்பென்ட்

குஜராத் மாநில சட்டசபையில் இன்று 54 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஒரு நாள் முழுவதும் சஸ்பென்ட் செய்யப்பட்டிருக்கின்றனர். குஜராத் மாநிலத்தில் கடும் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருவதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் சட்டசபையில் முழக்கமிட்டனர்.

அவர்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று முழக்கங்களை எழுப்ப அனைவரும் காவலர்களால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். அவர்களைத் தொடர்ந்து 50 எம்.எல்.ஏக்களும் இதே பிரச்சனையை எழுப்பி அமளியில் ஈடுபட மொத்தமாக 54 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களையும் நாள் முழுவதும் சஸ்பென்ட் செய்வதாக சபாநாயகர் அறிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+