6 தேமுதிக எம்.எல்.ஏக்களின் சஸ்பென்ட் ஓராண்டிலிருந்து 6 மாதமாக குறைப்பு!
சென்னை: தமிழக சட்டசபையில் இருந்து 6 தேமுதிக எம்.எல்.ஏக்கள் சஸ்பென்ட் காலத்தை ஓராண்டில் இருந்து 6 மாதமாக குறைத்து சபாநாயகர் தனபால் அறிவித்திருக்கிறார்.
தமிழக சட்டசபையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் ஜெயலலிதாவை தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ. தமிழழகன் புகழ்ந்து பேசியதால் இதர தேமுதிக எம்.எல்.ஏக்கள் அவரைத் தாக்க முயன்றனர். இதைத் தடுக்க முயன்ற மற்றொரு அதிருப்தி எம்.எல்.ஏ மைக்கேல் ராயப்பன் கடுமையாக தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 6 தேமுதிக எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி சபையின் உரிமைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உரிமைக் குழுவின் பரிந்துரையை ஏற்று 6 தேமுதிக எம்.எல்.ஏக்களையும் ஓராண்டு காலத்துக்கு சட்டசபையில் இருந்து சஸ்பென்ட் செய்வதாக சபாநாயகர் தனபால் நேற்று அறிவித்திருந்தார். இதற்கு தேமுதிக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன. தமிழக சட்டசபை வரலாற்றில் இதுபோல் முன் எப்போதும் தண்டனை விதிக்கப்பட்டதை இல்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இந்நிலையில் இன்று சட்டசபையில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள் தேமுதிக எம்.எல்.ஏக்களின் தண்டனையைக் குறைக்க வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரைப்படி அவை முன்னவரான ஓ.பன்னீர்செல்வம் தண்டனைக் காலத்தை 6 மாத காலமாகக் குறைத்து ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார். இதை ஏற்று 6 தேமுதிக எம்.எல்.ஏக்களின் சஸ்பென்ட் காலத்தை ஓராண்டில் இருந்து 6 மாத காலமாக குறைக்கப்படுகிறது என்று சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications