தேமுதிகவின் ராஜ்யசபா சீட் கனவுக்கு கை கொடுக்குமா திமுக?

தமிழக சட்டசபையில் தேமுதிகவுக்கு 29 எம்.எல்.ஏக்கள் இருந்தாலும் 5 பேர் அணி மாறிவிட்டனர். தற்போது 6 எம்.எல்.ஏக்கள் முதலில் ஓராண்டு காலத்துக்கு சஸ்பென்ட் செய்யப்பட்டனர். பின்னர் 6 மாத காலத்துக்கு அதாவது ராஜ்யசபா தேர்தலலில் வாக்களிக்காத வகையில் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனால் அக்கட்சியின் 18 எம்.எல்.ஏக்கள்தான் ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்க முடியும் என்ற நிலை உள்ளது. அதிருப்தியில் உள்ள 5 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தாலும் அவர்கள் தேமுதிகவின் வேட்பாளருக்கு வாய்ப்பளிக்கப் போவதில்லை என்பதுதான் நிதர்சனம்.
ஆக தேமுதிகவுக்கு தற்போது இருக்கும் ஒரே வாய்ப்பு 23 எம்.எல்.ஏக்களைக் கொண்ட திமுகதான். ஆனால் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் பதவிக்காலம் முடிவடைவதால் அவரை மீண்டும் ராஜ்யசபா எம்.பியாக்க தேமுதிகவின் ஆதரவு தேவை. இதனால் விட்டுக் கொடுக்கப் போவது யார்? வெல்லப் போவது யாரு? என்ற சூடான விவாதம் தமிழக அரசியல் அரங்கில் உருவாகி உள்ளது.
தேமுதிக கேட்பதைப் போல் ஒரு ராஜ்யசபா சீட்டை விட்டுக் கொடுத்து லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைப்பதற்கு அஸ்திவாரம் போட்டுவிடலாம் என திமுக கருதலாம். ஆனால் அதற்காக தமது மகளின் எம்.பி. பதவியை பணயம் வைப்பதா என்பதுதான் திமுக தலைவர் கருணாநிதி முன் உள்ள தர்ம சங்கடம். திமுகவில் ஸ்டாலின் - அழகிரி இடையேயான விரிசல் உச்சகட்டமாகிவிட்ட நிலையில் கனிமொழிக்கு எம்.பி. பதவி கிடைக்காமல் போனால் அவர் என்ன நிலைப்பாடு எடுப்பாரோ என்ற குழப்பம் திமுக தலைமைக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தைப் பொறுத்தவரையில் ஒரு ராஜ்யசபா சீட்டைப் பெற்றுவிட்டால் டெல்லி அரசியலில் வைக்கும் முதல் காலடியாக இருக்கும் என்பதுடன் டெல்லி அரசியல் வட்டாரங்களுடன் நெருக்கமான உறவை வளர்த்துக் கொள்ள பெரும் உதவியாக இருக்கும் என்பது கணக்கு. தமிழக அரசியலில் கடந்த காலங்களில் பாமக இப்படித்தான் ஒரு ராஜ்யசபா சீட் பிளஸ் இதர தேர்தல்கள் என்ற பார்முலாவை கடைபிடித்து அந்த ஒரு சீட்டை பெற்று மத்திய அமைச்சராகவும் கூட ஆனது. இந்த முன்னுதாரணத்தை பின்பற்றி எப்படியாவது ராஜ்யசபா எம்.பி சீட்டைப் பெறுவது என்பதில் கங்கணம் கட்டுகிறது தேமுதிக.
இரு கட்சிகளுக்கும் ஒரு ராஜ்யசபா சீட் என்பது மிக முக்கியம் என்பதால் திமுக- தேமுதிகவின் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
‘வாட்ச்' கொடுத்த திமுக.. அண்ணா அறிவாலய மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ‘ஜாக்பாட்' -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி!












Click it and Unblock the Notifications