மாணவர் போராட்டத்தை தோற்கடிக்கவே கல்லூரிகளுக்கு ஜெ. விடுமுறை அறிவித்தார்- ஸ்டாலின்
சென்னை: இலங்கை விவகாரத்தில் மாணவர்களின் போராட்டம் வெற்றி பெறக்கூடாது, நீர்த்து போய்விட வேண்டும் என்பதற்காகத்தான் முதல்வர் ஜெயலலிதா கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அறிவித்து மூட செய்துள்ளார் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
சென்னையில் நடந்த திமுக செயற்குழுக் கூட்டத்தில் பேசிய அவர்,
ஆட்சியில் திமுக இல்லாத காலத்திலேயே, ஆட்சிக்கு வருவோமா- மாட்டோமா என்று நினைக்கும் காலத்திலேயே இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக திமுக பல போராட்டங்களை நடத்தியுள்ளது.
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக நமது ஆட்சியே பறிபோனது. கடந்த முறை ஆட்சியில் இருந்தபோதுகூட போராட்டம் நடத்தினோம். உண்ணாவிரதம் இருந்தோம். மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தினோம்.
எம்.பிக்கள் போய் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்கள். இதற்கு மேல் வேறு எவரும் செய்ய முடியாது என்ற நிலையில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறோம். இதற்கு மேல் எந்த தியாகத்தையும் நாங்கள் செய்தோம் என்று யாராவது சொல்ல முடியுமா?.
எம்.எல்.ஏ. பதவி இழந்து, ஆட்சி இழந்து, இப்போது அமைச்சர் பதவியையும் இழந்து வந்திருக்கிற இவ்வளவு பெரிய தியாகத்தை இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் உள்பட யாராவது செய்ய முடியுமா?. எங்களை குறை சொல்லும் யாராவது திமுக செய்த தியாகத்தில் எதையாவது செய்திருக்கிறார்களா?.
டெசோ இயக்கம் புது வேகத்தில் இயங்கிய பிறகுதான் மாணவர்கள் போராட்டத்திற்கு ஒரு உற்சாகம் ஏற்பட்டது. மாணவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு திமுக உறுதுணையாக இருக்கிறது. ஆனால், அந்தப்போராட்டம் வெற்றி பெறக்கூடாது, நீர்த்து போய்விட வேண்டும் என்பதற்காகத்தான் ஜெயலலிதா கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அறிவித்து மூட செய்துள்ளார் என்றார்.
-
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications