சஸ்பென்ட் செய்யப்பட்ட 6 தேமுதிக எம்.எல்.ஏக்களுக்கு இவ்ளோ இழப்பு...
சென்னை: தமிழக சட்டசபையில் சஸ்பென்ட் செய்யப்பட்ட 6 தேமுதிக எம்.எல்.ஏக்கள் 6 மாத காலத்துக்கு 'எம்.எல்.ஏ' என்ற தகுதியை இழக்கின்றனர். இதனால் அவர்கள் இழக்கும் சலுகைகள் என்ன தெரியுமா?
முதலில் எம்.எல்.ஏக்களுக்கு என்னவெல்லாம் கிடைக்கும் என பார்க்கலாம்
சம்பளம் ரூ50 ஆயிரம்
தமிழக எம்.எல்.ஏக்களுக்கான சம்பளம் - ரூ.8,000, ஈட்டுப்படி - ரூ.7,000, டெலிபோன் படி - ரூ.5,000, தொகுப்பு படி - ரூ.2,500, தொகுதி படி - ரூ.5,000, தபால் படி - ரூ.2,500, வாகனப்படி - ரூ.20,000 என மொத்தம் ரூ50 ஆயிரம் கிடைக்கிறது.
பயண சலுகைகள்
எம்.எல்.ஏ. விடுதி வாடகை ரூ.250, பயணப்படி - ரெயிலில் ஏ.சி. இரண்டு அடுக்கு பெட்டிக்கான கட்டணம், தினப்படி - ரூ.500, தமிழகம் முழுவதும் இலவச பஸ் பாஸ். துணைக்கு ஒருவரை அழைத்துச் செல்லலாம், வீட்டில் ஒரு டெலிபோன். எம்.எல்.ஏ. விடுதியில் ஒரு டெலிபோன், எம்.எல்.ஏ. குடியிருப்பில் மாதம் ரூ.250 வாடகையில் ஒரு வீடு. (அல்லது) விடுதி வாடகை ஒரு நாளைக்கு 2 ரூபாய் 50 பைசா மட்டும்
சிகிச்சை சலுகைகள்
இதுமட்டுமின்றி அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை, வெளிச்சந்தையில் வாங்கும் மருந்துகளுக்கான தொகையை திரும்ப பெறலாம், பெரிய அறுவை சிகிச்சைகளுக்கு சில நிபந்தனைகளுடன் நிதி உதவி.,அனைத்து புத்தகங்களுடன் கூடிய பிரமாண்டமான சட்டசபை நூலகத்தை பயன்படுத்தலாம், ஒரு உதவியாளர் உண்டு, நோட்டு, பேனா, பென்சில், கவர் உள்ளிட்ட எழுதுபொருட்கள் இலவசம், எம்.எல்.ஏ. விடுதியில் எம்.எல்.ஏ.க்களுக்காக பிரத்யேக ரயில் டிக்கெட் கணினி முன்பதிவு மையம், ரயில் நிலையத்தில் இருந்து வேறு இடங்களுக்கு செல்வதற்கு ஆண்டுக்கு 2 தவணையாக ரூ.20,000,
நிவாரண உதவிகள்
இறந்தால் ரூ.2 லட்சம், எம்.எல்.ஏ.வுக்கு எதிர்பாராத மரணம் ஏற்பட்டால் ஆம்புலன்ஸ் வசதி, இறந்த எம்.எல்.ஏ. குடும்பத்திற்கு குடும்பப்படி மாதம் ரூ.1,000, சட்டப்பூர்வ வாரிசுக்கு மொத்த தொகையாக ரூ.2 லட்சம் தரப்படும். இறந்த எம்.எல்.ஏ.வின் சட்டப்பூர்வ வாரிசுக்கு குடும்ப ஓய்வூதியமாக ரூ.5,000 கிடைக்கும்
ஆனால் தற்போது சஸ்பென்ட் செய்யப்பட்ட 6 தேமுதிக எம்.எல்.ஏக்களுக்கும் இத்தனை சலுகைகளும் 'ஓராண்டுக்கு' கிடைக்க வழியில்லையாம்!!
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications