தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமில்லை: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்

தமிழக சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. அப்போது பேசிய உறுப்பினர்கள் மாநிலத்தில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.
அவர்களுக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அளித்த பதில் வருமாறு,
மதுவிலக்கு வேண்டும் என்பதில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தான் அதிக அக்கறை உள்ளது. ஆனால் அது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்பதால் சமூக விரோதிகளின் கைகளுக்கு சென்ற மது வருவாயை அரசு கஜானாவுக்கு கொண்டு வரத் தான் டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை துவங்கப்பட்டது.
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரும் காங்கிரஸார் தங்கள் கட்சி ஆளும் ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு முதலில் அறிவுரை கூறட்டும். நாடு முழுவதும் மதுவிலக்கு வராத வரை தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கை அமல்படுத்துவது சாத்தியமில்லை என்றார்.












Click it and Unblock the Notifications