சென்னை ஆல் இந்தியா ரேடியோவிற்கு பூட்டுப் போட திரண்ட மாணவர்கள் கைது
சென்னை: சென்னையில் ஆல் இந்தியா ரேடியோ அலுவலகத்திற்கு பூட்டு போட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்தும், தனி ஈழத்திற்கு பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசு அலுவலகங்களில் முற்றுகை, சாலை மறியல், உண்ணாவிரதம், ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் மெரீனா கடற்கரையில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தை பூட்டு போடும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். அதன்படி இன்று காலையில் கலங்கரை விளக்கம் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டனர்.
உருவபொம்மை எரிப்பு
இலங்கை அதிபர் ராஜபக்சே, பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி ஆகியோரை கடுமையாக விமர்சித்து முழக்கமிட்டனர். பின்னர் ராஜபக்சேவின் உருவ பொம்மையை பாடை கட்டி எடுத்து வந்து ஒப்பாரி வைத்து அழுத மாணவர்கள் சிறிது நேரத்தில் உருவபொம்மையை எரித்தனர்.
இதைத்தொடர்ந்து கையில் பூட்டுகளுடன் வானொலி நிலையத்தை நோக்கி சென்ற மாணவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். உடனே மாணவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மாணவர்கள் அனைவரையும் போலீசார் தூக்கிக் கொண்டுபோய் வேன்களில் ஏற்றினர். அப்போது மாணவர்களுக்கும் போலீசாருக்கும் பிரச்சினை உருவானது. பின்னர் கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் 2 வேன்களில் அருகில் உள்ள திருமண மண்பத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த போராட்டம் காரணமாக வானொலி நிலையத்தை சுற்றி போலீசார் சுமார் 5 இடங்களில் தடுப்பு வேலிகளை அமைத்திருந்தனர். மெரீனா கடற்கரையில் இருந்து சாந்தோம் வீதியாக அரசு பஸ்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. வேறு எந்த வாகனமும் அந்த வழியே செல்லவில்லை.
பல்லாவரத்தில் மறியல்
இதேபோல் பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கல்லூரி அருகே ரேடியல் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களை கைது செய்து பஸ்சில் ஏற்றினர். குறைந்த அளவே போலீசார் பாது காப்பு பணியில் இருந்ததால் மாணவர்கள் பஸ்சின் ஜன்னல் வழியே எகிறி குதித்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு மாணவர்கள் அனைவரையும் கைது செய்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications