மோடிக்கு தனது கதவை திறந்துள்ள அமெரிக்கா
அகமதாபாத்: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அமைச்சர்கள், தொழில் அதிபர்கள் அடங்கிய குழு குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேசியது. மேலும் அந்த குழு அவரை அமெரிக்காவுக்கு வருமாறு அழைத்துள்ளது.
அமெரிக்க அமைச்சர்கள், தொழில் அதிபர்கள் அடங்கிய குழு கடந்த 26ம் தேதி இந்தியா வந்தது. அக்குழு வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அந்த குழு இன்று அகமதாபாத் சென்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியது.
இந்த சந்திப்பின்போது மோடியின் நிர்வாகத் திறமையை பாராட்டிய அவர்கள் அவரை அமெரிக்காவுக்கு வருமாறு அழைத்துள்ளனர். அவர்களின் அழைப்பை மோடியும் ஏற்றுக் கொண்டுள்ளார். அவர் வரும் ஜூன் மாதம் அமெரிக்கா செல்லக்கூடும் என்று கூறப்படுகிறது.

2002ம் ஆண்டு குஜராத் கலவரத்திற்கு பிறகு கடந்த 2005ம் ஆண்டு முதல் அமெரிக்கா மோடிக்கு விசா மறுத்து வருகிறது. இந்நிலையில் தான் அமெரிக்க குழு அவரை அமெரிக்காவுக்கு அழைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications