ஸ்டெர்லைட் போராட்டம்... நேரடி ஒளிபரப்பு செய்ய தடை... பத்திரிக்கையாளர்கள் போராட்டம்
தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தை நேரடியாக ஒளிபரப்ப முயன்ற புதியதலைமுறை தொலைக்காட்சி வாகனத்தை அப்புறப்படுத்தக்கோரி போலீசார் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
தூத்துக்குடியில் விஷவாயுவை வெளியிடும் ஸ்டெர்லைட் ஆலையை மூடகோரி பல்வேறு அரசியல் கட்சியினரும் பொதுமக்கள் தன்னெழுச்சி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தை நேரடியாக ஒளிபரப்ப புதிய தலைமுறை தொலைக்காட்சி முடிவு செய்து ஒளிபரப்பு வாகனத்தை ஆலைக்கு முன்பாக நிறுத்தியது. அப்போது அங்கு வந்த மாவட்ட எஸ்.பி. ராஜேந்திரன், உடனடியாக அப்புறப்படுத்துமாறு கூறினார். இதற்கு ரிப்போர்ட்டர், கேமராமேன் ஆகியோர் மறுத்துள்ளனர். ஆனாலும் போராட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்ய விடவில்லை.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பத்திரிக்கையாளர்களும் மாவட்ட எஸ்.பி க்கு எதிராக முழக்கமிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications