பலான கோலத்தில் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ... டிவியில் காட்டியதால் மானம் போச்சு!

இதனால் அவர் அடுத்த சட்டசபைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று கூறி விட்டார்.
கர்நாடகாவில் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. பாரதீய ஜனதா ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீது கூறப்பட்ட ஊழல் புகார் மற்றும் ஆபாச பட புகார்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த ஒரு ஆண்டு முன்பு சட்டசபை கூட்டத்தின் போது மந்திரிகள் செல்போனில் ஆபாச படம் பார்த்ததாக கூறப்பட்டது.
இது தொடர்பாக அமைச்சர்கள் சி.சி.பாட்டீல், லட்சுமண் சவதி, கிருஷ்ண பாலேமர் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் உடுப்பி தொகுதி பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. ரகுபதி பட் (45) 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் உடுப்பி மாவட்டம் முழுவதும் உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
மேலும் சில பத்திரிகை இணையதளத்திலும் படம் வெளியானது. இந்த சி.டி. விவகாரம் கர்நாடகா அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. ரகுபதி பட் எம்.எல்.ஏ.வுக்கு அரசியல் கட்சியினரும், பொது மக்களும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். அவர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை ரகுபதி பட் எம்.எல்.ஏ. மறுத்து உள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
நான் உடுப்பி தொகுதியில் வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று விடுவேன் என்ற காரணத்தால், எனது அரசியல் எதிரிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். சி.டி.யில் இளம்பெண்ணுடன் இருப்பது நான் இல்லை.
தேர்தலில் என்னை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற முடியாமல் போய்விடும் என்ற பயத்தில் சிலர் இந்த சதி செயலில் ஈடுபட்டுள்ளனர்.
நான் வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. என்னால் பா.ஜ.கவுக்குப் கெட்டப் பெயர் வரக்கூடாது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளேன். இந்த சி.டி. விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.
ஏற்கனவே இவரது மனைவி தற்கொலை
கர்நாடகத்தில் கடந்த 2008ம் ஆண்டு பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபோது, ரகுபதி பட் எம்.எல்.ஏ.வாக தேர்வாகி இருந்தார். அப்போது இவரது மனைவி பத்மப்ரியா தற்கொலை செய்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வருகிற மே 5ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக எம்.எல்.ஏ. மீது செக்ஸ் புகார் எழுந்திருப்பது அக்கட்சிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் இது அக்கட்சிக்கு பின்டைவு ஏற்படுத்தும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications