கோவை பள்ளி மாணவி பாலியல் பலாத்கார வழக்கு: 4 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது
கோவை: கோவையில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான , அந்த மாணவியின் தாய் மாமன் உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். அவர் குழந்தையாக இருந்த போதே, தாய் பிரிந்து சென்றதால், அத்தை ஈஸ்வரி வீட்டில் தங்கி இருந்து படித்து வந்தார்.
அச்சிறுமியின் தாய்மாமன் கோபாலகிருஷ்ணனுக்கு குடிபழக்கம் இருந்தது. கடந்த ஆண்டு சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவரை கோபாலகிருஷ்ணன் கோவையை சேர்ந்த தனது நண்பரிடம் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு மயக்க ஊசி செலுத்தி கோபாலகிருஷ்ணன், அவருடைய நண்பர் பாலு என்ற பால சுந்தரம், கருப்புச்சாமி மற்றும் ராகம் என்ற கருப்புச்சாமி ஆகியோர் அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த சிறுமி, 17 வயதான தனது உறவினர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.
அவரும் அந்த சிறுமியை பலாத்காரம் செய்து உள்ளார். பின்னர் அவர்கள் அந்த சிறுமியை மிரட்டி, தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். இது குறித்து அந்த சிறுமி கோவை மாநகர போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து மனு கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கோபாலகிருஷ்ணன், கருப்பசாமி (59), ராகம் கருப்பசாமி (45), பாலு என்ற பாலசுந்தரம் (72), 17 வயதான பெயிண்டர் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 17 வயதான பெயிண்டர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே 13 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட அந்த மாணவியின் தாய்மாமன் கோபாலகிருஷ்ணன், கருப்பசாமி, ராகம் கருப்பசாமி, பாலு ஆகிய 4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோவை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதனுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அவருடைய உத்தரவின்பேரில் அந்த 4 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications