அதிமுகவில் ஐக்கியமா? புதிய தமிழகம் எம்.எல்.ஏ. ராமசாமி மறுப்பு!
சென்னை: புதிய தமிழகம் கட்சியை விட்டு வெளியேறி அதிமுகவில் தாம் இணையப் போவதாக வெளியான செய்திகளை அக்கட்சியின் எம்.எல்.ஏவான நிலக்கோட்டை ராமசாமி மறுத்துள்ளார்.
தேமுதிகவின் 5 எம்.எல்.ஏக்கள் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து அணி மாறி இருக்கின்றனர். இந்த நிலையில் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த நிலக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ ராமசாமி அதிமுகவில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால் இதனை மறுத்து ராமசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், நான் கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக நிலக்கோட்டை சட்ட மன்ற தொகுதியில் போட்டியிட்டு நிலக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். கடந்த 10 ஆண்டுகளாக டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சியில் மாவட்ட பொறுப்பாளராக பணியாற்றி வருகின்றேன். இந்த நிலையில் நான் அ.தி.மு.க.வில் சேரப்போவதாக கற்பனையான செய்தி வெளிவந்துள்ளது. நான் புதிய தமிழகம் கட்சியில் சாதாரணத் தொண்டனாக பணியாற்றி கொண்டிருந்தபோது என்னை சட்டமன்ற உறுப்பினராக்கி அழகு பார்த்தவர் டாக்டர் கிருஷ்ணசாமி. நான் புதிய தமிழகம் கட்சிக்கும் அதன் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கும் என்றும் விசுவாசமாக இருப்பேன். நான் கனவில் கூட புதிய தமிழகம் கட்சியை விட்டு விலகுவதை நினைத்துப் பார்த்ததில்லை என்று கூறியுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications