அனைவரும் அன்பு பாராட்ட வேண்டும்: ஜெயலலிதா ஈஸ்டர் வாழ்த்து

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:
தியாகச் சுடராம் இயேசு பிரான் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பகைவரிடத்தும் அன்பு காட்டும் இரட்சகரான இயேசுபிரான், கொடூரமான முறையில் சிலுவையில் அறையப்பட்ட மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த தினம் ஈஸ்டர் திருநாளாக உலகெங்கிலும் உள்ள கிறிஸ்துவர்களால் கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் கிறிஸ்துவர்கள் தேவாலயங்களுக்குச் சென்று அன்பின் திருவுருவான இயேசுபிரானின் கருணைகளை நினைவு கூர்ந்து சிறப்பு பிரார்த்தனைகள் செய்வார்கள்.
இந்த நன்னாளில் உலக உயிர்கள் அனைத்தையும் அன்பால் கவர்ந்த இயேசு பிரான் போதித்த தியாகம், பாவமன்னிப்பு, அன்பு, சகோதரத்துவம், சமாதானம், சேவை மனப்பான்மை போன்ற உயரிய குணங்களை அனைவரும் பின்பற்றி வேறுபாடுகளைக் கடந்து சமத்துவ மனப்பான்மையோடு ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி வாழ்ந்திட வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறி உள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications