பிஇ பகுதி நேர படிப்புக்கான விண்ணப்பம் நாளை முதல் வினியோகம்
நெல்லை: தமிழகத்தில் நெல்லை அரசு பொறியியல் கல்லூரி, மதுரை தியாகராஜ நகர் பொறியியல் கல்லூரி, உள்பட 9 கல்லூரிகளில் பகுதி நேர பிஇ, பிடெக் படிப்புகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 2013-14ம் ஆண்டிற்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. டிப்ளமோ முடித்தவர்கள் இந்த படிப்பில் சேர தகுதி உடையவர்கள் ஆவர்.
15.4.2013க்கு முன்பாக டிப்ளமோ முடித்து பணியில் உள்ளவர்களும், பணியில் இல்லாதவர்களும் இந்த படிப்பில சேர்த்து கொள்ளப்படுவர். இதற்கான விண்ணப்ப வினியோகம் தமிழகம் முழுவதும் நாளை தொடங்கி ஏப் 15ம் தேதி வரை நடக்கிறது.
கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரி, சேலம், நெல்லை அரசு பொறியியல் கல்லுரிகள், காரைக்குடி அழகப்பா செட்டியார் பொறியியல் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் அரசு தொழில் நுட்ப கழகம், பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி, கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரி, கோவை தொழில்நுட்ப நிறுவனம், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி, சென்னை தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் ஆகிய இடங்களில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பம் வேண்டுவோர் வேண்டுதல் கடிதத்துடன் The Secretary, part time B.E.,/B.Tech Admission, Coimbatore என்ற பெயருக்கு எடுக்கப்பட்ட ரூ.300 டிடியை கொடுத்து பெற்றுக் கொள்ளலாம். எஸ்சி, எஸ்டி ஆகிய பிரிவினர் ரூ.150 டிடி எடுத்தால் போதுமானது. அத்துடன் அட்ஜெஸ்ட் செய்யப்பட்ட ஜாதி சான்றின் நகலையும் இணைக்க வேண்டும்,. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயலாளர், பகுதி நேர பிஇ, பிடெக் மாணவர் சேர்க்கை, கோவை தொழில்நுட்ப நிறுவனம், கோவை என்ற முகவரிக்கு ஏப் 15ம் தேதி மாலை 5 மணிககுள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications