Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரத்தம்லாம் எனக்கு 'நன்னாரி சர்பத்' மாதிரி.... மிரட்டும் மிஷல்!

Subscribe to Oneindia Tamil

கலிபோர்னியா: ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித்தியாசமான பழக்கம் இருக்கும். கலிபோர்னியாவைச் சேர்ந்த மிஷலுக்கு இருக்கும் பழக்கம் ரொம்ப நூதனமானது மட்டுமல்ல வினோதமானதும் கூட. அதாவது தினசரி இவர் ஒரு லிட்டர் ரத்தம் குடிக்கிறாராம்.

காலை எழுந்ததும் சிலர் காபி, சிலர் டீ குடிப்பார்கள். ஆனால் மிஷலுக்கோ ஜில்லென்று ரத்தம் குடித்தால் தான் பொழுதே புலருமாம். பிறகுதான் வேலையையே ஆரம்பிப்பாராம்.

ரத்தம் குடித்தால் தனக்கு புது சக்தி பிறப்பதாகவும் அவர் சிலாகித்தபடி சொல்கிறார். எந்த ரத்தமாக இருந்தாலும் சற்றும் தயங்காமல் மக்கில் ஊற்றி மடக் மடக்கென்று குடித்து விடுகிறார் மிஷல்.

மிரட்டும் உருவம்... மிஷலுக்கு வயதோ 29தான்....

மிரட்டும் உருவம்... மிஷலுக்கு வயதோ 29தான்....

மிரட்டும் தோற்றத்துடன் நன்கு பல்க்காக காணப்பாடுகிறார் மிஷல். வயது 29தான் ஆகிறது. ஆனால் முரட்டுத் தோற்றம், வாய் நிறைய ரத்தத்துடன் படு களேபரமாக காணப்படுகிறார்.

பன்றி முதல் பசு வரை ஓ.கேதான்...

பன்றி முதல் பசு வரை ஓ.கேதான்...

பன்றி ரத்தம் முதல் பசு மாட்டு ரத்தம் வரை பாரபட்சமே இல்லாமல் குடிக்கிறார் மிஷல். அவருக்கு என்ன மூடு இருக்கிறதோ அதற்கேற்ப குடிப்பாராம்.

பச்சத் தண்ணி மாதிரி பாஸு!

பச்சத் தண்ணி மாதிரி பாஸு!

மிஷலுக்கு ரத்தம் குடிப்பது என்பது பச்சைத் தண்ணீரைக் குடிப்பது போலவாம். எல்லோரும் தண்ணீர் குடிப்பார்கள். நான் ரத்தம் குடிக்கிறேன் என்கிறார் கேஷுவலாக.

தோணும்போது ஒரு சிப்பு...

தோணும்போது ஒரு சிப்பு...

படிக்கும்போது, ரிலாக்ஸாக இருக்கும்போது, டிவி பார்க்கும்போது, படம் வரையும்போது என எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் ஒரு சிப் எடுத்துக் கொள்கிறாராம்.

ஒயின் மாதிரிதான்....

ஒயின் மாதிரிதான்....

ரத்தம் என்பது கிட்டத்தட்ட ஒயின் மாதிரிதான் டேஸ்ட்டாக இருப்பதாக கூறும் மிஷல், ஒயின் போலத்தான் அதைக் குடிப்பதாக சொல்கிறார்.

டெய்லி ஒரு லிட்டர்....

டெய்லி ஒரு லிட்டர்....

ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் ரத்தத்தைக் குடித்து விடுகிறாராம் மிஷல். சில நேரங்களில் பச்சையாக குடிப்பாராம், சில நேரங்களில் சூடு செய்து எதையாவது கலந்து குடிப்பாராம்.

எருமை ரத்தம்தான் நல்லாருக்குங்க!

எருமை ரத்தம்தான் நல்லாருக்குங்க!

எந்த மாட்டின் ரத்தத்தையும் விட எருமையின் ரத்தம்தான் உப்புக்கரிக்காமல் மிதமாக இருக்குமாம். இது மிஷல் சொல்லும் அனுபவ வார்த்தை. - சொல்லி முடித்து பிறகு நாக்கை சப்புக் கொட்டுகிறார்.

அதாச்சு 10 வருஷம்!

அதாச்சு 10 வருஷம்!

மிஷல் 10 வருஷமாக ரத்தம் குடிக்கிறாராம். இதுவரை 1000 காலன் ரத்தம் குடித்திருப்பாராம்.

'விக்ஸ் திண்ணி'...!

'விக்ஸ் திண்ணி'...!

இவரைப் பற்றி டிஎல்சி என்ற டிவியில் நடக்கும் ஷோவில் காட்டுகிறார்கள். இதேபோல விக்ஸை விரும்பிச் சாப்பிடும் நபர், தேனீக்களை உடலெங்கும் விட்டு விரும்பி கொட்டு வாங்கும் குண்டுப் பெண் என வினோதமான பழக்கங்களைக் கொண்டவர்களைக் கொண்டு ஒரு தொடரையும் ஒளிபரப்புகிறார்கள்.

நம்மூரில் பல்பு சாப்பிடுவார்கள் சிலர்... அதிலும் குண்டு பல்பை விரும்பிச் சாப்பிடுவார்கள். சமீபத்தில் நாயை கடித்து இரத்தம் குடித்தார் ஒரு வடநாட்டுப் பெண்மணி. மிஷலும் அந்த கேட்டகரி போல...!

எல்லாம் சரி, மிஷலின் ரத்தம் குடிக்கும் படத்தைப் பார்த்து யாராவது வாந்தி எடுத்தால், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல...!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+