மன்னிப்பு கிடைக்குமா 'முன்னாபாய்'க்கு?... மன்னிப்பு மனு மீது கருத்து கேட்கிறார் மகாராஷ்டிர ஆளுநர்

Subscribe to Oneindia Tamil

Sanjay Dutt
மும்பை: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நடிகர் சஞ்சய் தத்துக்கு பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி தன்னிடம் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உள்துறை அமைச்சக பரிசீலனைக்கு மகாராஷ்டிர மாநில ஆளுநர் அனுப்பி வைத்தார்.

இந்த மனுவை எம்.பி. ஜெயப்பிரதா மற்றும் முன்னாள் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அமர்சிங் ஆகியோர் மகாராஷ்டிர மாநில ஆளுநர் கே.சங்கரநாராயணனிடம் அளித்துள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஆளுநர் மாளிகை, ஆளுநரிடம் வழங்கப்பட்ட மனுவை அவர் மாநில உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தார் என்று தெரிவித்தது.

தனது மனுவில் அமர்சிங் கூறுகையில், விசாரணை நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் சஞ்சய் தத் தீவிரவாதி இல்லை என்று தெரிவித்துள்ளன. சஞ்சய் தத்துக்கு எதிராக ஊடகங்களே விசாரணை நடத்தி அவர் மீதுமுத்திரை குத்தி விட்டன. இது தவறானதாகும்.

கடந்த 20 வருடங்களாக மன உளைச்சலில் சிக்கி தவிக்கிறார் சஞ்சய் தத். அவருக்கு 2 குழந்தைகள் உள்ளன. தற்போது அவர் மகாத்மா காந்தி குறித்தும், அகிம்சை, சத்தியாகிரகம் குறித்தும் மக்களிடையே போதித்து வருகிறார். அதைக் கருத்தில்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் அமர் சிங்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+