மும்பை வான்கடே மைதானத்துக்குள் நடிகர் ஷாரூக்கான் நுழைய தடை நீடிப்பு!

தடை ஏன்?
கடந்த ஆண்டு நடைபெற்ற 5-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் போது மே 18-ந் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியது. இந்த போட்டியின் போது உரிய அடையாள அட்டை இல்லாமல் சென்ற ஷாரூக்கானுக்கும் வான்கடே மைதானத்தின் காவலர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இதில் ஷாரூக்கான் மீது போலீசிலும் புகார் கூறப்பட்டது. ஆனால் ஷாரூக்கானோ மைதான பணியாளர்கள் தமது குழந்தைகளிடம் அத்துமீறி நடந்தனர்.. அதனால் கண்டித்தேன் என்றார். இந்தவிவகாரத்தில் மும்பை வாக்னடே மைதானத்துக்குள் ஷாரூக்கான் நுழைய 5 ஆண்டுகாலத்துக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் தடை விதித்தது.
மும்பையில் 7-ந் தேதி போட்டி
தற்போது மீண்டும் ஷாரூக்கான் தடை பிரச்சினை கிளம்பியுள்ளது. மும்பை இந்தியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையிலான லீக் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் வரும் 7-ந் தேதி நடைபெறுகிறது. ஆனால் மும்பை கிரிக்கெட் சங்கம் விதித்த தடை நீடிப்பதால் நடிகர் ஷாரூக்கான் இப்போட்டியை ஸ்டேடியத்துக்கு நேரில் சென்று பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுல்ளது. இது குறித்து மும்பை கிரிக்கெட் சங்க இணை செயலாளர் நிதின் தலால் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாநில கிரிக்கெட் சங்கத்தால் தடை செய்யப்பட்ட எந்தவொரு நபரும், எங்கள் ஸ்டேடியத்துக்குள் நுழைய அனுமதி கிடையாது என்ற அம்சம் கொண்ட ஒப்பந்தத்தை மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இன்று கையெழுத்திட இருக்கிறோம் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications