நொய்டாவில் 10ம் வகுப்பு மாணவி மயக்க மருந்து கொடுத்து கற்பழிப்பு
நொய்டா: நொய்டாவில் பத்தாம் வகுப்பு மாணவி மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, கடத்தி கற்பழிக்கப்பட்டுள்ளார்.
நொய்டாவில் காய்கறி வியாபாரம் செய்யும் ஒருவரின் 16 வயது மகள் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவர் கடந்த ஞாயிற்றுகிழமை காலை 11 மணிக்கு எண்ணெய் வாங்க அருகில் உள்ள மார்கெட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் மருத்துவமனை ஒன்றில் மேனேஜராக இருக்கும் ராகுல் சோலான்கி என்பவரை சந்தித்துள்ளார்.
ஏற்கனவே பழக்கமுள்ள அவர் மாணவியை தனது மாருதி ஆல்டோ காரில் வீட்டில் விடுவதாகக் கூறியுள்ளார். ஆனால் மாணவி அவருடன் காரில் ஏற மறுத்துள்ளார். இதையடுத்து ராகுல் மாணவியை பின்தொடர்ந்து மயக்கமருந்து தோய்த்த கைக்குட்டை அவரது முகத்தில் வைத்துள்ளார். மாணவி மயங்கவே அவரை காரில் தூக்கி போட்டு ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கடத்திச் சென்று கற்பழித்துள்ளார்.
இதற்கிடையே மாணவியை காணாமல் அவரது குடும்பத்தார் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் மயக்க தெளிந்த அவர் தனிமையான ஒரு இடத்தில் காரில் கிடப்பதை அறிந்தார். அவர் அங்கிருந்து கிளம்பி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து ராகுலை கைது செய்தனர்.
மாணவியின் அக்காவை ராகுலின் நண்பர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கற்பழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications