ரூ.100 கோடி அபராதம்... தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சுப்ரீம் கோர்ட் நிபந்தனை அனுமதி!
சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் இன்று அனுமதி அளித்து தீர்ப்பளித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையினால் தூத்துக்குடி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்பது சமூக ஆர்வலர்களின் புகாராகும். இதனையடுத்து ஸ்டெர்லைட் தாமிர உருட்டு ஆலையை மூட வேண்டும் என்று கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் 28ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வைகோ வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ் தலைமையிலான பெஞ்ச் விசாரித்து, ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தீர்ப்பு கூறினர். இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்து ஆலையை மூடுவதற்கு இடைக்கால தடை உத்தரவு பெற்றது. இந்த வழக்கு கடந்த ஆண்டு விசாரிக்கப்பட்டு தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 23ந் தேதி ஆலையில் இருந்து வெளியேறிய விஷவாயுவால் தூத்துக்குடி நகரைச் சேர்ந்த மக்களுக்கு கண் எரிச்சல், நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்தினர். இதனையடுத்து மார்ச் 30ந் தேதி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை மூட உத்தரவிட்டது. இதனையடுத்து ஆலைக்கு நிறுத்தப்பட்ட மின்சாரம் நிறுத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் நடவடிக்கை தொடர்பாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் வழக்கின் தீர்ப்பு எழுதப்பட்டுவிட்ட நிலையில் இம்மனுவை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது. இன்று ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
மேலும் சுற்றுச்சூழல் நிதியாக நிரந்தர வைப்பாக ரூபாய் 100 கோடியை வைக்கவும் ஆலைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கும் வட்டி மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு செலவிடலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேல்முறையீடு-வைகோ
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் . மேலும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவை தற்போதைய உச்சநீதிமன்ற தீர்ப்பு கட்டுப்படுத்தாது என்றார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications