கணவன் மாயம்: தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி
தூத்துக்குடி: காணமல் போன கணவரை கண்டுபிடித்து தர வலியுறுத்தி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பாக இளம் பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி முத்தையாபுரம் முனியசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த இசக்கி. இவருக்கு முள்ளகாடு பகுதியை சேர்ந்தவர் அன்புராஜ் என்பருடன் காதல் ஏற்பட்டது. வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் கூட்டம்புளி அருகே வசித்து வந்தனர்.
தூத்துக்குடியிலுள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த அன்புராஜ் திருமணத்திற்கு பின்னர் வேலைக்கு செல்லவில்லை. மனைவியின் நகையை விற்று செலவு செய்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அன்புராஜ் திடீரென மாயமானார். இதுகுறித்து அன்பு இசக்கி முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
இதையடுத்து அவர் மதுரை ஐகோர்ட் கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த ஆனந்த இசக்கி யாரும் எதிர்பாராத நிலையில் கேனில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த மனு கொடுக்க வந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அப்போது அங்கு நின்றவர்கள் ஆனந்த இசக்கியிடம் இருந்த கேனை பறித்தனர். அவரிடம் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இநத சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications