அக்காவுடன் பேசிய வாலிபர் மீது ஆத்திரத்துடன் பாய்ந்த தம்பி -கத்திக்குத்து!
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் பிலாங்கால் என்ற இடத்தில் தனது அக்காவுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த காதலனுடன் கட்டிப் புரண்டு நடு ரோட்டில் சண்டை போட்டார் தம்பி. பின்னர் அக்காவின் காதலனை அவர் கத்தியால் சரமாரியாக குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிலாங்காலைச் சேர்ந்தவர் ராஜா. 19 வயதான இவர் கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ராணி. இவருக்கும் 19 வயதுதான். இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
ராணி கோவையில் பிஎஸ்சி நர்சிங் படித்து வருகிறார். கோவையில் இருவரும் தங்கியிருந்ததால் அடிக்கடி சந்தித்து காதலை வளர்த்துள்ளனர். 2 நாட்களுக்கு முன்பு இருவரும் ஊருக்கு வந்தனர். பின்னர் ஒரே பஸ்சில் ஊர் திரும்ப முடிவு செய்தனர்.
அதன்படி வடசேரி பஸ் நிலையம் வந்தனர். இது ராணியின் தம்பிக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர் வேகமாக பஸ் நிலையம் வந்தார். அங்கு ராஜாவும், ராணியும் சிரித்துப் பேசியபடி நிற்பதைப் பார்த்து ஆத்திரமடைந்தார். பின்னர் ராஜாவுடன் அவர் சண்டைக்குப் போனார். இருவரும் கட்டிப்புரண்டு பஸ் நிலையத்தில் சண்டை போட்டதால் அந்த இடமே பரபரப்பாகிப் போனது.
தன் கண் முன்பு காதலனும், தம்பியும் கட்டி உருண்டதைப் பார்த்து அதிர்ந்து போய் நின்றார் ராணி. கடுமையாக போராடி அவர்களை விலக்கி விட்டார். ஆனால் ராணியின் தம்பி ஆத்திரத்தின் உச்சிக்கே போய் கையோடு கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து ராஜாவை சரமாரியாக குத்தி விட்டார்.
இதில் ராஜாவின் வலது மார்பில் குத்திக் குத்து விழுந்தது. இதனால் அவர் துடித்தார். அதைப் பார்த்த ராணியின் தம்பி தப்பி ஓடி விட்டார். பின்னர் ராணியும், அங்கிருந்தவர்களும் சேர்ந்து ராஜாவை மீட்டு மருத்துவமனையில்சேர்த்தனர். அங்கு ராஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராணியின் தம்பியைக் கைது செய்தனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications