தம் அடிச்சு முடிச்சாச்சா, சரி சாகலாம் வாங்க!

Subscribe to Oneindia Tamil

குவைத்:குவைத்தில் ஆறு வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக மூன்று பேருக்கு தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டது. இந்த மூன்று பேரையும் கார் பார்க்கிங்கில் வைத்து தூக்கில் தொங்க விட்டு தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.

மூன்றில் ஒரு கைதிக்கு தூக்கில் தொங்க விடுவதற்கு முன்பு சிகரெட் புகைக்க அனுமதித்தனர் அதிகாரிகள். இருப்பினும் கைகளை அவிழ்த்து விடாமல் வாயில் சிகரெட்டை வைத்து புகைக்க வைத்து பின்னர் தூக்கில் தொங்க விட்டனர்.

கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்களை மூடி விட்டு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. கார் பார்க்கிங் ஒன்றில் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டதுதான் பரிதாபகரமானது.

கொலைகாரர்கள்

கொலைகாரர்கள்

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேருமே கொலை வழக்கில் கைதாகி தண்டனை பெற்றவர்கள் ஆவர்.

2007ம் ஆண்டுக்குப் பிறகு

2007ம் ஆண்டுக்குப் பிறகு

குவைத்தில் கடைசியாக 2007ம் ஆண்டுதான் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு இப்போதுதான் முதல் முறையாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடைசியாக தம்மடிக்க அனுமதி

கடைசியாக தம்மடிக்க அனுமதி

மூன்று பேரில் ஒருவர் தான் புகைக்க வேண்டும் என்று கடைசி ஆசையை வெளிப்படுத்தினார். இதையடுத்து அவருக்கு சிகரெட் கொடுக்கப்பட்டது. சிகரெட்டை வாயில் வைத்து பற்ற வைத்தனர் அதிகாரிகள். அவர் அடித்து முடித்ததும் தூக்கு மேடைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

மத்திய சிறைக்கு வெளியே.

மத்திய சிறைக்கு வெளியே.

வழக்கமாக சிறைக்கு உள்ளேதான் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவர். ஆனால் இவர்கள் மூவரையும் சிறைக்கு வெளியே வைத்து தண்டனை கொடுத்துள்ளனர்.

கார் பார்க்கிங்கில்

கார் பார்க்கிங்கில்

மத்திய சிறைக்கு வெளியே உள்ள கார் பார்க்கிங் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட மூவரையும் ஒரே நேரத்தில் தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்றினர்.

மூவரில் ஒருவர் பாகிஸ்தானியர்

மூவரில் ஒருவர் பாகிஸ்தானியர்

தூக்கிலிடப்பட்ட மூவரில் ஒருவர் சவூதி அரேபியர். இன்னொருவர் பாகிஸ்தானியர். இன்னொருவர் யார் என்பது தெரிவிக்கப்படவில்லை.

மூன்று சட்டங்களையும் குழைத்து...

மூன்று சட்டங்களையும் குழைத்து...

குவைத் நாட்டு சட்டம் ரொம்பவே வித்தியாசமானு. இஸ்லாமிய ஷரியா சட்டம், இங்கிலாந்தின் காமன் லா, ஒட்டமான் சிவில் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை குவைத் கடைப்பிடிக்கிறது.

64 முதல் 2007 வரை 72 பேர்

64 முதல் 2007 வரை 72 பேர்

1964ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை 72 பேரை தூக்கிலிட்டுள்ளது குவைத். இதில் 69 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள் ஆவர்.

எது எதற்கெல்லாம் தூக்கு

எது எதற்கெல்லாம் தூக்கு

போதை மருந்து கடத்தல், கொலை, துரோகம் உள்ளிட்டவற்றுக்கு அங்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது.

காத்திருப்போர் பட்டியலில் 48 கைதிகள்

காத்திருப்போர் பட்டியலில் 48 கைதிகள்

குவைத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றுவதற்காக 48 பேர் காத்துள்ளனர் என்று குவைத் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் குனா தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+