பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் ஆயுள் முழுவதும் சிறை: ஜனாதிபதி ஒப்புதல்
டெல்லி: பாலியல் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்த ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்ததை அடுத்து பாலியல் வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் 19 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவையிலும், 21ஆம் தேதி மாநிலங்களவையிலும் பாலியல் வன்கொடுமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது. இதையடுத்து, புதிய சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியிருக்கிறார்.
பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்க இந்த சட்டம் வழிசெய்கிறது.
குற்றத்தின் தன்மையைக்கேற்ப மரணத் தண்டனை அளிக்கவும் பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் - 2013ல் இடமுள்ளது.
பாலியல் வன்கொடுமைக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு குறைந்த பட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க இந்த மசோதா வகை செய்கிறது.
அமில வீச்சு, பெண்களை ரகசியமாகப் பின்தொடர்தல், தொல்லை தருதல் உள்ளிட்ட பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்க இந்த மசோதாவில் வழிவகுக்கப்பட்டுள்ளது. பெண்கள், சிறுமியர் ஆகியோரைப் பாதுகாப்பதற்கான சிறப்பு அம்சங்கள் திருத்தப்பட்ட இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளது.
மேலும் பாலியல் குற்றங்களுக்காக விதிக்கப்படும் ஆயுள்தண்டனையை, குற்றம் புரிந்தவர் தமது வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க வேண்டும் என்பதையும் இந்த மசோதா உறுதி செய்கிறது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications