காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்: மக்கள் பீதி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: காஷ்மீரில் இன்று பகல் 12.02 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
காஷ்மீரில் இன்று பகல் 12.02 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 5.4க பதிவாகியிருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பூமி அதிர்ந்தவுடன் மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கத்தால் பொருட் சேதமா யாருக்கும் காயமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
இந்த நிலநடுக்கும் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்டது. கடந்த 2005ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8ம் தேதி ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட 7.9 அளவிலான நிலநடுக்கத்திற்கு 40,000 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications