நீங்க தேர்தலை புறக்கணித்தால், மக்கள் உங்களை புறக்கணிப்பார்கள்.. விஜயகாந்த்துக்கு வீரமணி 'வார்னிங்'
Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மின் வெட்டு அதிகம் உள்ளது. மின் வெட்டை குறைப்போம் என்று சொல்லித்தான் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகியும் மின் வெட்டு குறையவில்லை. சோலார் மின் திட்டம் என்பது அறிவித்ததோடு இருக்கிறது.. கல்லூரிகள், வீடுகளுக்கு மானிய விலையில் சோலார் மின் சாதனங்களை வழங்க வேண்டு. கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்துவது என்பது வெறும் கண் துடைப்பு நாடகமே..
நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறி உள்ளார். அவர் தேர்தலை புறக்கணிக்கக்கூடாது. அப்படி தேர்தலை தேமுதிக புறக்கணித்தால் விஜயகாந்த் மற்றும் தே.மு.தி.க.வை மக்கள் புறக்கணிப்பார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications