காஞ்சியில் பரபரப்பு… பெண்ணை வெட்டிய ரவுடி சுட்டுக்கொலை

Subscribe to Oneindia Tamil

Rowdy who hacked a woman shot dead
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பெண்ணை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய ரவுடியை போலீஸார் என்கவுன்டரில் போட்டுத்தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புஞ்சை அரசன் தாங்கல் என்ற கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுளா. இன்று காலையில் மஞ்சுளா தனது வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த யுவராஜா, கமல்நாத் ஆகிய இரண்டு பேர், அரிவாளால் மஞ்சுளாவை வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.

அந்த இடத்திற்கு அருகிலேயே காவல்துறை சோதனை சாவடி இருந்ததால், போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள் இருவரும் அரிவாளைக் காட்டி போலீசாரை மிரட்டினர். இதனையடுத்து போலீசார் அவர்களை துப்பாக்கியால் சுட்டனர். இதில் யுவராஜா துப்பாக்கிக் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், வழியிலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மற்றொரு ரவுடியான கமல்நாத் காயமடைந்த நிலையில், அவரை போலீசார் கைது செய்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+