For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த பேஸ்புக் ஹோம் வந்துடுச்சுங்கோ....

Google Oneindia Tamil News

நியூயார்க்: புதிய ஆண்டிராயிட் மொபைல் போனை களம் இறக்குகிறது பேஸ்புக்.

பேஸ்புக் நிறுவனம் ஹெச்டிசியுடன் இனைந்து போன் தயாரிக்கிறது. இதை அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்துள்ளது பேஸ்புக். மேலும் பேஸ்புக் ஹோம் என்ற புதிய வசதியையும் அறிமுகப்படுத்தவுள்ளது. இது மொபைல் போன்களுக்கான இயங்குதளம் என்று நினைக்கவேண்டாம்.

ஆன்ட்ராய்டு இயங்குதளங்களில் இந்த வசதியை வெளியிட்டுள்ளது பேஸ்புக். இதன் மூலமாக ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் உள்ள முன்திரையை வித்யாசப்படுத்தியுள்ளது பேஸ்புக்.

இனிமேல் ஃபேஸ்புக் கணக்கில் உள்நுழைந்தால் தான் நண்பர்களின் தகவல்களை பெறமுடியும் என்ற முறையை மாற்றியுள்ளது. நீங்கள் இன்டர்நெட்டுடன் இணைத்துவிட்டால், முகப்பு திரையிலேயே அனைத்து தகவல்களையும் பெறலாம். நோடிபிகேசன்கள், நண்பர்கள் புதிதாக பதியும் படங்கள், பின்னூட்டங்கள் என அனைத்தும் மிகவும் சுலபமாக.

வரும் ஏப்ரல் 12 முதல் இந்த புதிய சேவையை முதல்கட்டமாக 5 போன்களிலும் எச்டிசியின் 'பர்ஸ்ட்டிலும்' வெளியிடுகிறது. இதற்கான ஃபேஸ்புக்கின் அதிகாரப்பூர்வ பக்கம் இது.

1 பில்லியன் பயனாளர்கள்

1 பில்லியன் பயனாளர்கள்

கடந்த 2004ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட பேஸ்புக் என்னும் சமூக இணையதளம், தற்போது ஒரு பில்லியனுக்கும் மேலான பயன்பாட்டாளர்களைக் கொண்டுள்ளது.

நண்பேன்டாவுக்காக...

நண்பேன்டாவுக்காக...

மார்க் ஸூகர்பர்க் என்பவர் தனது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள் தங்களின் நண்பர்கள் சிலருடன் தொடர்பில் இருப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த இணையதளம், இப்போது அனைவரது வாழ்க்கையிலும் இணைந்துவிட்டது.

சந்தைக்குப் புதுசு...

சந்தைக்குப் புதுசு...

பேஸ்புக் ஹோம் மூலம், செய்தி அனுப்புபவர் எந்த சேவை மூலம் அனுப்பினாலும், அவற்றையும் ஒருங்கிணைத்து உபயோகிப்பாளரின் திரையில் வெளிக்காட்டும் தொழில்நுட்பம், நீண்ட காலமாக எந்த பெரிய நிறுவனமும் அறிமுகப்படுத்தாத ஒரு புதிய வசதியாகக் கருதப்படுகின்றது.

நம்ம கடைக்கு வரட்டும்...

நம்ம கடைக்கு வரட்டும்...

விற்பனைக்கு வரும்போது, நம்ம கருத்து கந்தசாமிங்க என்ன சொல்றாங்கனு தெரியவரும்....

English summary
Facebook on Thursday unveiled a family of apps called “home” android operating system. Explaining the features of the new ‘home’ OS, Facebook CEO Mark Zuckerberg said that it modifies both the homescreen and the lockscreen. “You will have content loaded in the background and displayed automatically on both,” he said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X