என்னுடைய எண்ணங்களுக்கு மாறாக இருக்கிறது பாஜக: அத்வானி

Subscribe to Oneindia Tamil

Today's BJP does not match with my idea: Advani
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியில் தாம் அமைதியாக ஓரங்கட்டப்பட்டிருப்பதற்கு அதிருப்தி தெரிவிக்கும் வகையில் தம்முடைய எண்ணங்களுக்கு மாறாக தற்போதைய பாஜக இருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி பகிரங்கமாக பேசியிருக்கிறார்.

டெல்லியில் இன்று நடைபெற்ற பா.ஜ.க.வின் 33வது ஆண்டு விழாவில் அவர் பேசுகையில், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் என்னை புகழ்ந்து பேசியபோது மக்கள் அதை வரவேற்றனர். சரியான ஒன்றை யார் சொன்னாலும் உலகம் அதை வரவேற்று ஏற்றுக் கொள்ளும். நல்லதை வரவேற்க நாம் தயங்கக்கூடாது. தாழ்வு மனப்பான்மை கொள்ளக்கூடாது. அயோத்தி விவகாரத்தில் பா.ஜ.க. முன்னர் எடுத்த நிலைக்காக நான் வருத்தப்படவில்லை. மாறாக, பெருமிதம் கொள்கிறேன்.

எனது முந்தைய எண்ணங்களுக்கு மாறாக இன்றைய பா.ஜ.க. இருக்கிறது. கட்சிக்குள் ஒழுக்கக்கேடு, ஊழல் ஆகியவற்றுக்கு இடம் அளித்து விடக்கூடாது. பா.ஜ.க.வின் மூலம் இந்த நாடு பெரிய அளவில் ஆதாயம் அடைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே மேலோங்கி வரும் வேளையில் உள்கட்சி ஒழுக்கம்,ஊழலற்ற தன்மை ஆகியவை அவசியமாக கடைபிடிக்க வேண்டும் என்றார்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+