பிரதமர்- சோனியா படத்தை எரித்தால் பொறுக்க மாட்டோம், சும்மா இருக்க மாட்டோம்: ஈ.வி.கே.எஸ்

கோபி கச்சேரிமேடு பகுதியில் காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அதில் இளங்கோவன் கலந்து கொண்டு புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டி பேசுகையில்,
இந்த இடம் நடிகர் சிவாஜி மற்றும் காங்கிரஸ் தொண்டர்களின் உழைப்பில் வாங்கிய இடம். இதுபோன்று தொண்டர்களின் சேமிப்பில் வாங்கிய இடம் தமிழகம் முழுவதும் உள்ளது. ஆனால் இந்த காலத்தை போலறு மக்களிடம் பல கோடி வசூலித்து நாம் கட்சிக்கு இடம் வாங்கவில்லை.
காங்கிரசில் கோஷ்டி பூசல் இருக்கும். ஆனால் அது காங்கிரசின் வெற்றியை பாதிக்காது.
இந்தியாவை அதிக ஆண்டுகள் ஆண்ட கட்சி காங்கிரஸ் தான். வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ்தான் வெற்றி பெறும். இலங்கைப் பிரச்சனையில் தமிழர்களுக்கு காங்கிரஸ் கட்சி நல்லது செய்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் மக்கள் அதனை புரிந்து கொள்வார்கள். இலங்கைத் தமிழர்களுக்கு காங்கிரசும், மத்திய அரசும் செய்த நல்ல திட்டங்களை மக்களிடம் எடுத்து சொல்லுங்கள்.
இந்த பிரச்சனையில் காங்கிரசார் அமைதி காக்கிறார்கள். ஆனால் கட்சி கொடி எரித்தாலோ, பிரதமர் மன்மோகன் சிங், அன்னை சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் படத்தை எரித்தாலோ பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. பொறுக்க முடியாது என்றார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications