கேட் மிடில்டன் பிரசவம்: லைவ் 'வீடியோ' எடுக்க ஆசைப்படும் இளவரசர் வில்லியம்ஸ்

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் - கேட் மிடில்டன் திருமணம் 29-4-2011 அன்று நடந்தது. கேட் மிடில்டன் தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். ஜூலையில் கேட்டிற்கு குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தனது வாரிசு இந்த பூமியில் பிறக்கும் இனிய தருணத்தை வீடியோவில் படம் எடுக்க இளவரசர் வில்லியம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இளவரசரின் இந்த வினோத ஆசைக்கு இளவரசி மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிரசவ வீடியோ, சமூக விரோதிகளின் கையில் கிடைத்து அந்த காட்சிகள் இன்டர்நெட்டில் வெளியாகி விடக்கூடாது என கேட் மிடில்டன் அச்சப்படுவதாக பக்கிங்காம் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், பிரசவத்திற்கு முன்னர் மனைவியின எண்ணத்தை மாற்றி வீடியோ எடுத்தே தீருவது என்ற முடிவில் வில்லியம் தீர்மானமாக உள்ளதாக அவரது நெருங்கிய நண்பர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications