For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீபக் பரத்வாஜ் படுகொலை வழக்கில் இளைய மகன் கைது

By Mathi
Google Oneindia Tamil News

Deepak Bhardwaj
டெல்லி: பகுஜன் சமாஜ் கட்சியின் பிரமுகர் தீபக் பரத்வாஜ் படுகொலையில் அவரது இளைய மகன் நிதேஷை டெல்லி போலீசார் இன்று கைது செய்திருக்கின்றனர்.

தெற்கு டெல்லியில் கடந்த மார்ச் 26-ந் தேதி தீபக் பரத்வாஜ் படுகொலை செய்யப்பட்டார். இதில் கொலையாளிகள் என சந்தேகிக்கப்படும் 2 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஹரித்வார் சாமியார் ஒருவருக்கும் இக்கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

மேலும் பரத்வாஜை கொல்ல ரூ3 கோடி முதல் ரூ6 கோடி வரை கூலித் தொகை பேரம் பேசப்பட்டதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த சாமியாருக்கு வலை விரிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் பரத்வாஜ் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பாக எந்த துப்பும் போலீசுக்கு கிடைக்கவில்லை. அவர் ரியல் எஸ்டேட் தொழில் மூலம் பல நூறு கோடி ரூபாய் சொத்து குவித்திருந்தார். இதனால் தொழில் போட்டியால் அவர் கொல்லப்பட்டிருக்கலாமோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தினர்.,

இந்நிலையில்தான் பரத்வாஜ் கொலை செய்யப்பட்ட நாள் முதல் போலீசாரின் விசாரணை வளையத்தில் இருந்த அவரது இளையமகன் நிதேஷ் பரத்வாஜை இன்று போலீசார் கைது செய்துள்ளனர்.

சொத்து தகராறு அல்லது பணத்துக்காக அல்லது இரண்டுக்குமாகவே பரத்வாஜ் கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால்தான் நிதேஷை போலீசார் கைது செய்திருப்பதாக தெரிகிறது.

English summary
The Delhi Police today arrested Deepak Bhardwaj's younger son, Nitesh, in the murder case of the BSP leader and real estate tycoon, who was killed in his south Delhi farmhouse on the morning of March 26.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X