பெண்கள்தான் நாட்டின் பொருளாதார முன்னேற்ற சக்தி: நரேந்திர மோடி புகழாரம்

இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் (பிக்கி) பெண்கள் அமைப்பின் சார்பில் நேற்று டெல்லியில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் குஜராத் முதல்வர் மோடி கலந்துகொண்டார். விழாவில் அவர் பெண்களைக் குறித்து கூறும் பொழுது, ‘பல தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களை பெண்கள் நடத்தி வருகின்றனர். பெண்கள் முடிவு எடுக்கும் நிலையில் இருந்தால் சமூக பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக விளங்குவார்கள்.
பெண்கள் சக்திதான் நாட்டின் எதிர்காலத்தை மாற்றும். பெண் சிசு கொலை, பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். குஜராத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் வீடுகள், அந்தந்த குடும்பத்தின் மூத்த பெண் உறுப்பினர் பெயரில் பத்திரப்பதிவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கிராம அளவில் உள்ள பஞ்சாயத்துகளில், பெண் தலைவருக்கு இதுபோன்ற லட்சியம் இருக்குமேயானால், நிச்சயம் ஒருநாள், நம்நாட்டில் வறுமை ஒழிந்தே தீரும். குஜராத்தில் மிக முக்கிய தொழில் முனைவோர்களாக, பல பெண்கள் உள்ளனர்.இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.
அதேபோல பள்ளி ஆவணங்களில் தாயின் பெயரை கட்டாயம் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதன் மூலம் பெண்கள் மீதான பிற்போக்கான மனநிலை மாறும். தொழில் நிறுவனங்கள் பெண்களை தலைமை பொறுப்புகளில் நியமிக்க வேண்டும்.
அவர்கள் தனித்தன்மையான உத்திகளை வகுத்து செயல்படுவார்கள். சுய தொழில் செய்து வெற்றி பெற்ற பெண்களின் வெற்றிக் கதைகளை பிக்கி பெண்கள் அமைப்பு விளம்பரப்படுத்த வேண்டும். இதனால் பல பெண்களும் சாதனை செய்ய தூண்டப்படுவார்கள், என இவ்வாறு மோடி பேசினார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications