For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வண்டி ஓட்டியபடியே புருஷன், பொண்டாட்டி சண்டை.. குழந்தை கீழே விழுந்து பலி

Google Oneindia Tamil News

நெல்லை: மோட்டார் சைக்கிளை ஓட்டியபடியே கணவனும், மனைவியும் சண்டை போட்டபடி சென்றனர். அப்போது மனைவி கையில் வைத்திருந்த குழந்தை தடுமாறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. மனைவியும் படுகாயமடைந்தார்.

வர வர புருஷன் பொண்டாட்டி சண்டைகளுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது.எங்கு பார்த்தாலும் சண்டை போட ஆரம்பித்து விட்டனர் இப்போதெல்லாம். இடம் பொருள் ஏவல் பார்ப்பதில்லை.

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே மோட்டார் சைக்கிளில் போனபடி சண்டை போட்டுள்ளனர் கணவனும், மனைவியும். இதில் பாவம் அவர்களது கைக்குழந்தை கீழே தடுமாறி விழுந்து அநியாயமாக உயிரிழந்துள்ளது.

கடையநல்லூர் பக்கமுள்ள கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் குற்றாலிங்கம். இவரது மனைவி முப்புடாதி. காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 5 மாத ஆண்குழந்தை உண்டு.

தம்பதியருக்குள் அடிக்கடி தகராறு நடப்பதுண்டாம். இதன் காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர். முப்புடாதி தன் தாய்வீட்டுக்குச் சென்றவர், வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கணவர் மீது தென்காசி காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார்.

இதனிடையே பிரச்சனையைத் தீர்ப்பதற்காகவும் குழந்தையைக் கோவிலில் தத்துக் கொடுத்து பரிகாரம் செய்ய வேண்டும் என ஜோதிடர் கூறியதாக சொன்ன குற்றாலிங்கம், மனைவி முப்புடாதியையும் குழந்தையும் அவரது தாய் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு நேற்று கோவிலுக்குச் சென்றுள்ளார்.

பைக்கில் செல்லும் போதே வழியில் தம்பதியருக்கிடையே தகராறு ஏற்பட்டதாம். இதனால் ஆத்திரமடைந்த குற்றாலிங்கம் கையால் பின்னால் உட்கார்ந்திருந்த மனைவியை இடிக்க அதில் நிலைகுலைந்த முப்புடாதி கைப்பிள்ளையோடு தவறி விழுந்திருக்கிறார்.

இதில், காயமடைந்த குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அது இறந்து போனது. காயமடைந்த முப்புடாதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அதற்குள் குற்றாலிங்கம் தப்பி விட்டார். அவரை தற்போது தேடி வருகின்றனர்.

English summary
A 5 month old kid fell down and died after its mom and dad quarrelled in running bike near Kadayanallur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X