நெல்லை அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் கலவரம்: ரூ. 50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
நெல்லை: நெல்லை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள கல்லூரி பொருட்கள் சேதமடைந்தன.
நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே இருக்கும் திடியூரில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று உள்ளது. அங்கு படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். அந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு, மோதல் நடந்து வருகிறது. மோதலில் மாணவர்கள் காயம் அடைந்த சம்பவங்கள் நடந்துள்ளது. ஆனால் இது குறித்து யாரும் போலீசில் புகார் கொடுக்கவில்லை.
அதனால் மாணவர்கள் பிரச்சனை தொடர் பிரச்சனையாக உள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதோடு கல்லூரி மற்றும் விடுதிக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.
கல்லூரி கண்ணாடி, ஜன்னல்கள், கதவுகளை அடித்து நொறுக்கினர். மேலும் லேப் மற்றும் அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர்களை உடைத்தனர். இது தவிர கல்லூரிக்கு சொந்தமான 4 கார்களை சேதப்படுத்தினர். இதனால் கல்லூரி போர்க்களம் போன்று காட்சி அளித்தது. இது குறித்து முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் கிடைத்தவுடன் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கலவரத்தில் ஈடுபட்ட மாணவர்களை அப்புறப்படுத்தினர். அதன் பிறகு கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டு மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இந்த கலவரத்தில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள கல்லூரி பொருட்கள் சேதமடைந்துள்ளது என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க கல்லூரியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கலவரத்தில் மாணவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications