அட ஏங்க நீங்க வேற, விக்கிலீக்ஸ் பத்தி கேட்டுக்கிட்டு... விமான நிலையத்திலிருந்து நாராயணசாமி!
Subscribe to Oneindia Tamil

வழக்கம் போல சென்னை விமான நிலையவாசலில் வைத்துத்தான் இப்படிக் கூறினார் நாராயணசாமி.
அடிக்கடி சென்னை விமான நிலையத்திற்கு வருவார் நாராயணசாமி. அப்போதுதான் கூடங்குளம் உள்ளிட்ட பல முக்கியமான விவகாரங்கள் குறித்து அவர் முக்கியத் தகவல்களை அளிப்பது வழக்கம். அந்த அடிப்படையில் இன்றும் அவர் சென்னை விமானநிலையம் வந்தார். அங்கு செய்தியாளர்கள், இந்திரா குடும்பம் குறித்து விக்கிலீக்ஸ், நிறைய தகவல்கள் வெளியிடுகிறதே என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதுகுறித்து நாராயணசாமி கூறுகையில், விக்கிலீக்ஸ் தவறான, அடிப்படையற்ற, யூகத்தின் அடிப்படையிலான கருத்துக்களை வெளியிட்டுள்ளது. அவற்றுக்கெல்லாம் பதில் அளிக்க முடியாது. அவை வெளியிடும் கருத்துக்களை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை என்றார்.












Click it and Unblock the Notifications