துபாய்: ஈடிஏ நிர்வாக இயக்குநர் சலாஹூத்தீனுக்கு 'பிரைட் ஆப் இந்தியா' விருது
துபாய்: ஈடிஏ அஸ்கான் ஸ்டான் நிர்வாக இயக்குனர் சலாஹூத்தீனுக்கு 'பிரைட் ஆப் இந்தியா' விருது வழங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, சிவகங்கை, விருது நகர் மற்றும் இராமநாதபுரம் ஆகிய தென் தமிழக மாவட்டங்களைக் கொண்ட ரோட்டரி இண்டர்னேஷனல் மாவட்டம் 3212ன் சார்பாக, ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அல்ஹாஜ் செய்யது எம். சலாஹூத்தீனுக்கு பாராட்டு விழா நடந்தது.
இதில் "THE PRIDE OF INDIA" என்ற விருது வழங்கப்பட்டு சலாஹூத்தீன் கெளரவிக்கப்பட்டார்.

நிகழ்ச்சியில் 2013-2014 ரோட்டரி கவர்னர் ஜோசைய்யா வில்லவராயர், முன்னாள் கவர்னர்கள் ஜோ வில்லவராயர், டாக்டர் ஷண்முகம், ஆகியோர் சலாஹூத்தீனின் சிறந்த சேவையைப் பாராட்டிப் பேசினர்.
தொடர்ந்து சலாஹூத்தீன் அவர்களுக்கு விருது வழங்கி பேசிய முன்னாள் கவர்னர் ஆறுமுகப் பாண்டியன், தனது உரையில், சலாஹூத்தீன் மற்றும் ஈடிஏ குழுமத்தின் சாதனைகளை மேற்கோள் காட்டி சுமார் 70,000 குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் அளித்து வரும் சேவையைப் பாராட்டினார்.
பின்னர் ஏற்புரையாற்றிய சலாஹூத்தீன், ரோட்டரி அமைப்பின் நெட் ஒர்க் மற்றும் அதன் சேவைகளை தன் அனுபவங்களை முன் வைத்து வியந்து பாராட்டினார். ரோட்டரி கிளப்பின் பணிகளுக்கு மத்தியில் தம் சேவை மிகக்குறைவே என்றவர், தனக்கு கிடைத்த பாராட்டுக்களை, ஒரு அறிவுரையாக எடுத்து கொள்வதாக கூறி, ரோட்டரி அமைப்பின் சேவைகளுக்கு தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.
மேலும் விழாவிற்கு வந்த ஏர் இந்தியா துபாய் விமான நிலைய மேலாளர் ராதாகிருஷ்ணனிடம் மதுரை- துபாய் நேரடி விமான சேவையை துரிதப்படுத்த வேண்டியதுடன், பன்னாட்டு விமான சேவைக்கு தூத்துக்குடியை தயார்படுத்தவும் ரோட்டரி கவ்ர்னர்களுக்கு கோரிக்கை விடுத்தார் சலாஹூத்தீன்.

முன்னதாக இந்தியாவிலிருந்து வருகை தந்த 44 ரோட்டரி நிர்வாகிகளையும் ரோட்டரி செயலாளர் பி.கே. சரவணன் அறிமுகப்படுத்திப் பேச, அவர்கள் அனைவரும் சலாஹூத்தீனுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.
அமீரக அமைப்புகளின் சார்பாக, ஈமான் பொதுச் செயலாளர் குத்தாலம் லியாக்கத் அலி, பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் கீழை ராஸா, அமீரகத் தமிழ் மன்றம் ஜெசீலா ரியாஸ், அமீரா அமீன், ரிதம் ஈவெண்ட்ஸ் சபேசன், அமீரகத் தமிழர்கள் அமைப்பு சிம்ம பாரதி, காயிதே மில்லத் பேரவை ஹமீது யாஸீன், முத்தமிழ் சங்கம் ஷாஹூல் ஹமீது, யு.ஏ.இ. தமிழ்ச் சங்கம் ரமேஷ், துபை தமிழ்ச் சங்கம் முஹம்மது தாஹா, மற்றும் ஏர் இந்தியா துபை ஏர் போர்ட் மேலாளர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் விருது பெற்ற சலாஹூத்தீன் அவர்களை வாழ்த்தி மற்றும் தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த ரோட்டரி விருந்தினர்களை வரவேற்றும் பேசினர்.
நிகழ்ச்சியை கீழக்கரை ஹமீது ரஹ்மான் தொகுத்து வழங்க, உலக நகைச்சுவையாளர் சங்கம் துபை கிளை நெல்லை முகைதீன் பிச்சை நன்றியுரையாற்றினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரோட்டரி இண்டர்நேஷனல் நிர்வாகிகளுடன் இணைந்து, நெல்லை எஸ்.எஸ். மீரான், மற்றும் அம்பை ஸ்பர்ஜன் சுகுமார் ஆகியோர் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications