பிரானஸ் ஐடி நிறுவனம் ஆல்டியை ரூ. 533 கோடி ரொக்கம் கொடுத்து வாங்கும் டிசிஎஸ்

டிசிஎஸ் நிறுவனம் பிரான்ஸில் உள்ள ஆல்டி என்ற ஐடி நிறுவனத்தை ரூ.533 கோடி அதுவும் ரொக்கமாக கொடுத்து வாங்கப் போவதாக இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தை வாங்குவதன் மூலம் பிரான்ஸில் முக்கிய நிறுவனமாக டிசிஎஸ் ஆகும். ஆல்டிக்கு பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் சுவிட்சர்லாந்தில் 1,200 ஊழியர்கள் உள்ளனர்.
இது குறித்து டிசிஎஸ் சிஇஓ மற்றும் எம்டி. என். சந்திரசேகரன் கூறுகையில்,
ஐரோப்பாவின் மூன்றாவது மிகப்பெரிய ஐடி சர்வீசஸ் மார்க்கெட் பிரான்ஸ். இந்த நிறுவனத்தை வாங்குவதன் மூலம் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய முடியும். இதன் மூலம் பிரான்ஸில் எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
டிசிஎஸ் கடந்த 1992ம் ஆண்டு முதல் பிரான்ஸில் வர்த்தகம் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று மும்பை பங்குச் சந்தையில் டிசிஎஸ் பங்குகளின் விலை 2 சதவீதம் அதிகரித்து ரூ.1,512க உயர்ந்து நாள் இறுதியில் ரூ. 1,497க குறைந்தது.












Click it and Unblock the Notifications