பதவி உயர்வுக்காக உயர் அதிகாரிகளுக்கு விருந்தாக்கினார்: கடற்படை அதிகாரி மனைவி போலீசில் புகார்
கொச்சி: கடற்படையைச் சேர்ந்த தனது கணவர் பதவி உயர்வு பெற தன்னை மூத்த அதிகாரிகளுக்கு விருந்தாக்கியதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இளம்பெண் கொச்சி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இந்திய கடற்படையில் பணியாற்றுபவர் ஒரிசாவைச் சேர்ந்த ரவி கிரண். அவருக்கும் ஒரிசாவைச் சேர்ந்த சுஜாதா(25) என்பவருக்கும் கடந்த 2011ம் ஆண்டில் திருமணம் நடந்தது. தற்போது ரவி கேரள மாநிலம் கொச்சியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சுஜாதா கொச்சி துறைமுக போலீசாரிடம் கடந்த 4ம் தேதி புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
எனது கணவர் பதவி உயர்வு பெறவும், சில சலுகைகளைப் பெறவும் கடந்த 2 மாதங்களாக என்னை பல மூத்த அதிகாரிகளுக்கு விருந்தாக்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் என்னை அடித்து, ஒரு அறையில் போட்டு பூட்டி வைத்துவிடுவார். அவர் மீதும் என்னிடம் தவறாக நடந்த பிற கடற்படை
அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
அவரது புகாரின்பேரில் ரவி கிரண் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை கடற்படை மறுத்துள்ளது. கணவன் மனைவி இடையேயான பிரச்சனையில் சுஜாதா இவ்வாறு புகார் கொடுத்துள்ளார் என்று தெற்கு கடற்படை தெரிவித்துள்ளது.
சுஜாதா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் ரவி முன்ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்க போலீசார் எதிர்ப்பு தெரிவிக்கவிருக்கின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications