அடக் கிராதகா... கள்ளக்காதலியின் மகளை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த நபர் கைது

Subscribe to Oneindia Tamil

கோவை: தனது கள்ளக்காதலியின் மகளைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அக்கிரமமாக நடந்து கொண்ட நபரைப் போலீஸார் கைது செய்தனர்.

கோவை வடவள்ளி பொன்னிநகரைச் சேர்ந்தவர் சரவணகுமார். 42 வயதான இவர் செராமிக்ஸ் கடை வைத்துள்ளார். இதில் வேலை பார்த்து வந்தவர் கோமளா என்ற 35 வயதுப் பெண். கோமளா கணவரைப் பிரிந்து வசித்து வருகிறார். இவருக்கு 15 வயதில் மகள் உள்ளார். 8ம் வகுப்பு படித்து வருகிறார்.

கோமளாவை தனது வலையில் வீழ்த்தினார் சரவணக்குமார். இருவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர்.அடிக்கடி வீட்டுக்கே வந்து கோமளாவுடன் உல்லாசமாக இருப்பாராம் சரவணக்குமார். இது கோமளாவின் மகளுக்குத் தெரியவரவே அவர் அதிர்ச்சி அடைந்து தனது தாயைக் கண்டித்துள்ளார்.

இதனால் பதட்டமடைந்த கோமளா, அதுகுறித்து சரவணக்குமாரிடம் பேசியுள்ளார். இதனால் கோபமடைந்தார் சரவணக்குமார். அவர் கோமளாவின் மகளிடம் வந்து இதில் தலையிடாதே என்று கூறி கண்டித்துள்ளார். அத்தோடு நில்லாத அவர் கோமளாவின் வீட்டில் தனியாக இருந்தபோது வந்தார். பின்னர் கோமளாவின் மகளை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து தவறாக நடக்க முயற்சித்தார்.

இதனால் பயந்து அலறிய அப்பெண் அக்கம்பக்கத்தினரை சத்தம் போட்டு கூட்டினார். பின்னர் போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் சரவணக்குமாரைக் கைது செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+