மன்மோகன் சிங் ஆட்சி மகா மோசம்… மக்கள் மனசு கருத்துக் கணிப்பு
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 5 ஆண்டு ஆட்சியை முழுமையாக முடிக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறி வருகிறார். ஆனால் மத்திய அரசின் ஆட்சி பற்றி மக்களிடம் நல்ல மதிப்பு ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை.
மக்கள் மனசு என்ற பெயரில் விகடன் நடத்திய சர்வேயில் இது தெரியவந்துள்ளது. மகா, மெகா ஊழல்கள், அதை மறைக்க மத்திய அரசு செய்யும் வேலைகள் போன்றவை மக்களின் மனதில் மிகப்பெரிய கொதிப்பையே ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கிறது.
மன்மோகன் சிங் ஆட்சி பற்றி மக்கள் என்னதான் சொல்கின்றனர் மேற்கொண்டு படியுங்களேன்.

மகா மோசமான ஆட்சி
கடந்த முறை 5 ஆண்டு காலத்தை ஆண்ட காங்கிரஸ் கூட்டணி அரசு மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. இதோ நான்கு ஆண்டுகாலம் முடிந்துவிட்டது. மத்திய அரசின் இந்த 4 ஆண்டு கால ஆட்சி எப்படி இருக்கிறது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு மிகவும் மோசம் என்று 4,561 பேர் கூறியுள்ளனர். மோசம் என்று 1,584 பேரும், சுமார் என்று 1,492 பேரும் குறிப்பிட்டுள்ளனர். பிரமாதம் என்று 119 பேர் சர்வேயில் தெரிவித்துள்ளனர்.

ஊழல் சும்மா அதிருதில்ல
2ஜி ஸ்பெக்ட்ரம் தொடங்கி காமன்வெல்த், நிலக்கரி ஏலம், ஹெலிகாப்டர் ஊழல் என மன்மோகன் சிங் ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பஞ்சமில்லை. இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றிய கேள்விக்கு அதிரவைக்கிறது என்று 3,566 பேர் கூறியுள்ளனர். அது அவ்ளோதாங்க நீர்த்துப் போயிரும் என்று 2,887 பேரும், விசாரணை முடிந்த பின்னர்தான் தெரியும் என்று 1,303 பேரும் கூறியுள்ளனர்.

காங்கிரசுக்கு ஓட்டு கிடையாது
மத்திய அரசின் 4 ஆண்டுகால சாதனை மற்றும் செயல்பாடுகளை வைத்து யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு வாக்களிக்க மாட்டேன் என்று 5,416 பேர் கூறியுள்ளனர். தேர்தல் நேரத்தில் முடிவெடுப்பேன் என்று 2,089 பேரும், காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்பேன் என்று 251 பேரும் கூறியுள்ளனர். மத்தியில் ஆளும் கூட்டணி ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களுக்கான பதில் வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications