For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடக சட்டமன்றத் தேர்தல்: அதிமுக சார்பில் 5 பேர் போட்டி-பெங்களூரில் 2 தொகுதிகளில்..

By Chakra
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் 5 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

வரும் மே மாதம் 5ம் தேதி கர்நாடகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது.

இதில் பெங்களூரில் காந்தி நகர், ராஜாஜி நகர் ஆகிய தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. காந்தி நகரில் அதிமுக கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தியும், ராஜாஜி நகரில் கே.முனிசாமியும் போட்டியிடுகின்றனர். முனிசாமி அதிமுக செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்.

அத் போல கோலார் தங்க வயல் தொகுதியில் எம்.அன்பு போட்டியிடுகிறார்.

மைசூர் மாவட்டம் நரசிம்மராஜா தொகுதியில் ரவீந்திர குமாரும், சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள ஹனூர் தொகுதியில் ரவியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

காந்தி நகர், ராஜாஜி நகர், கோலார் தங்க வயல் ஆகிய தொகுதிகளில் தமிழர்களே பெரும்பாலானவர்களாக வசிப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
AIADMK supremo and Tamil Nadu chief minister Jayalalithaa on Friday fielded her party's Karnataka unit secretary V Pugazhenthi and four others for the May 5 assembly polls. Pugazhenthi will contest from Gandhi Nagar while party's executive committee member and local unit leader K Munisamy has been fielded from Rajaji Nagar, Jayalalithaa said in a party statement. M Anbu (Kolar Gold Field--SC), R Ravindra Kumar (Narasimharaja) and M Ravi (Hanur) are the other candidates in the fray.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X