ஜப்பானில் 6.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம்: 22 பேர் காயம்
டோக்கியோ: ஜப்பானில் இன்று காலையில் ஏற்பட்ட கடும் நில நடுக்கத்திற்கு 22 பேர் காயமடைந்தனர். அதில் 7 பேர் பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜப்பானின் தென்மேற்கு பகுதியான கோபே அருகே இன்று அதிகாலை இந்திய நேரப்படி 2.00 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆகப் பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் வீடுகள் இடிந்து விழுந்து 22 பேர் காயமடைந்தனர். 7 பேர் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் உயிரிழப்பு பற்றியோ வேறு சேதமதிப்பு பற்றியோ தகவல்கள் வெளியாகவில்லை.
நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. ஜப்பானில் தற்போது ஒரே ஒரு அணு உலை மட்டும் இயங்கி வருகிறது.
இந்த நிலநடுக்கத்தால் உலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
2011-ம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கடுமையான சுனாமி அலைகள் தாக்கின. இதனால் அங்கு இயங்கி வந்த அணு உலைகளின் இயக்கம் நிறுத்தப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications