இங்கிலாந்தில் இந்தியப் பெண் 2 மகள்களுடன் மர்மச் சாவு

லண்டனின் வடமேற்கே உள்ள ருசிலிப் என்ற இடத்தில் வசித்தவர் ஹீனா சோலங்கி (34). இந்திய வம்சாவளியை சேர்ந்த அவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் ஆய்வுக்கூட தொழில்நுட்ப ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் தனது மகள்கள் ஜாஸ்மின் (9), பரீஷ் (4) ஆகியோருடன் வீட்டிற்குள் பிணமாக கிடந்தார்.
தகவல் கிடைத்ததும் லண்டன் போலீசார் விரைந்து சென்று 3 பேரின் உடல்களையும் கைப்பற்றினர். வீட்டில் கிடந்த ஒரு சூட்கேஸ் மற்றும் ஒரு குழாயையும் எடுத்து சென்றார்கள்.
2 மகள்களுடன் அவர் செத்தது எப்படி? என்பது மர்மமாக இருக்கிறது. அதே நேரத்தில் கேஸ் சிலிண்டர் கசிவு காரணமாக இருக்கலாம் என்று ஒரு தகவலும், ஏதோ குடும்ப பிரச்சனையில் அவர் தனது 2 குழந்தைகளையும் கொன்று தற்கொலை செய்திருக்கலாம் என்று மற்றொரு தகவலும் கூறுகின்றன.
விசாரணை நிறைவடைந்த பிறகே உண்மை தெரியும். தற்போதைக்கு எதுவும் கூற இயலாது என்று போலீசார் கூறி விட்டனர்.
இச்சம்பவம் நடைபெற்ற வீட்டில் ஹீனா சோலங்கி தனது கணவர் கால்பிஷ் (42) மற்றும் அவருடைய பெற்றோருடன் வசித்தார். சம்பவம் நடைபெற்ற போது இவர்கள் யாரும் வீட்டில் இல்லை. மனைவி, குழந்தைகள் இறந்த தகவல் கிடைத்த பிறகே கால்பிஷ் வீடு திரும்பியிருக்கிறார்.
ஹீனா சோலங்கி குஜராத் மாநிலத்தில் பிறந்தவர். தெற்கு குஜராத் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். திருமணத்திற்கு பிறகு லண்டனில் குடியேறினார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications