கிங்பிஷர் பங்கு விலை ரூ. 6.90.. ஒரு காலத்தில் ரூ. 335 ஆக இருந்தவை!

ஸ்டேட் பேங்க் உள்ளிட்ட 14 வங்களிடம் ரூ. 7,000 கோடியை வாங்கிய கிங்பிஷர் உரிமையாளர் விஜய் மல்லையா, அதற்கு இப்போது வட்டி கூட கட்டவில்லை. இந்தப் பணத்தை அவரிடம் இருந்து எப்படி மீட்பது என்று தெரியாமல் வங்கிகள் திணறி வருகின்றன.
ஏர்லைன்ஸ்சும் மூடப்பட்டுவிட்டது, விமானங்களை குத்தகைக்குத் தந்தவர்கள் எடுத்துச் செல்ல ஆரம்பிவிட்டனர், ஏர்லைன்ஸ்சின் லைசென்ஸ் ரத்தாகிவிட்டது, ஊழியர்களுக்கு பல மாதம் சம்பளம் கொடுக்கவில்லை, எரிபொருள் நிறுவனங்களுக்கு கடனை அடைக்கவில்லை.. இப்படி பல நெருக்கடிகளில் உள்ளது கிங்பிஷர் நிறுவனம்.
இந் நிலையில் வாங்கிய கடனுக்காக மல்லையா தந்த சில சொத்துக்களையும் சில நிறுவனங்களின் பங்குகளையும் விற்கும் வேலையை வங்கிகள் ஆரம்பித்துள்ளன. மேலும் இப்போதைக்கு இந்த விமான நிறுவனம் மீண்டும் இயங்க வாய்ப்பில்லை என்பதும் உறுதியாகிவிட்டது.
இதையடுத்து இன்று இதன் பங்குகள் விலை இதுவரை இல்லாத அளவுக்கு சரிந்தன. அதன் விலை இப்போது ரூ. 6.90 ஆக உள்ளது. இந்தப் பங்குகளின் விலை 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி மிக அதிகபட்சமாக ரூ. 335 ஆக இருந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications