For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியின் சைரஸ் ப்ரோச்சா மீது ஜெ. அவதூறு வழக்கு

By Chakra
Google Oneindia Tamil News

TN govt. files defamation case against Cyrus Broacha
சென்னை: பிரபல டிவி தொகுப்பாளரும், தொலைக்காட்சி அரசியல் விமர்சகருமான சைரஸ் ப்ரோச்சா மீது தமிழக அரசு அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளது.

ஆங்கில, இந்தித் தொலைக்காட்சிகளில் மிகப் பிரபலமான சைரஸ் எம்.டிவியில் வி.ஜேவாக இருந்தவர். இப்போது சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியில் நாட்டின் அரசியல் விவகாரங்களை விமர்சிக்கும் The Week That Wasn't என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

இதில் பிரதமர் மன்மோகன் சிங்கில் ஆரம்பித்து, சோனியா, நரேந்திர மோடி, மம்தா, சீதாராம் யெச்சூரி, கருணாநிதி என பாகுபாடு பாராமல் அனைவரையும் விமர்சிக்கப்படுவது வழக்கம். அரசியல் தலைவர்களைப் போலவே உடையணிந்து, அவர்களைப் போன்ற மேனரிசத்துடன் பேசி நடித்து விமர்சனங்களை முன் வைக்கும் நிகழ்ச்சி இது.

கடந்த 2ம் தேதி ஒளிபரப்பான நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்திருந்தனர். சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்ற ஜெயலலிதாவின் கோரிக்கை குறித்தும், இது தொடர்பாக பிரதமருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம் குறித்தும் விமர்சிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் சைரஸ் மீதும், இந்த நிகழ்ச்சிக்கு ஸ்கிரிப்ட் எழுதிய ஆசிஸ் சக்யா மீதும், இயக்குனர் குனால் விஜய்கர் மீதும் தமிழக அரசு அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளது.

தமிழக அரசின் சார்பில் தலைமை வழக்கறிஞர் ஜெகன் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த சர்ச்சைக்குரிய வீடியோ இது தான்...

<center><center><iframe width="650" height="417" src="http://www.youtube.com/embed/A_dJtmv50Os" frameborder="0" allowfullscreen></iframe></center></center>

English summary
Political satirist on television, Cyrus Broacha, is in trouble over his remarks on Tamil Nadu Chief Minister Jayalalithaa regarding her letter to the Prime Minister asking Manmohan Singh not to allow Sri Lankan players in the Indian Premier League (IPL). The State government has slapped a criminal defamation case against him and his team members, scriptwriter Asis Shakya and show director Kunal Vijaykar. City Public Prosecutor M.L. Jegan filed the defamation case on behalf of Ms. Jayalalithaa. After taking the complaint on file, the court may soon issue summons to them to appear before it and face trial. The case pertains to the edition of The Week That Wasn’t hosted by Mr. Broacha and telecast on CNN-IBN channel on April 2.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X