மும்பை குண்டுவெடிப்பு: சஞ்சய் தத்தை தொடர்ந்து சைபுனிஷா, 6 பேர் சரணடைய அவகாசம் தந்த சுப்ரீம் கோர்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி; மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஷைபுனிஷா உட்பட 7 பேர் நீதிமன்றத்தில் சரணடைய 4 வார கால அவகாசம் அளித்துள்ளது உச்சநீதிமன்றம்.

1993 ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் இறுதித் தீர்ப்பை அண்மையில் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியிருந்தது. அதில் பலரது சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டிருந்தது. உச்சநீதிமன்றம் சிறைத் தண்டனையை உறுதி செய்ததைத் தொடர்ந்து தாம் நீதிமன்றத்தில் சரணடைய 6 மாத கால அவகாசம் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். ஆனால் அவருக்கு 4 வார கால அவகாசம் மட்டுமே கொடுத்தது உச்சநீதிமன்றம்.

1993 bomb blast accused
இதேபோல் சைபுனிஷா என்பவர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்ததிருந்தது. இந்நிலையில் அல்டாப் அலி சையத், அன்ஜூம் அப்துல் ரஜாக் மற்றும் யூசுப் நுல்வாலியா ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைய உச்சநீதிமன்றம் இன்று 4 வார கால அவகாசம் கொடுத்தது. மேலும் கால அவகாசம் நிராகரிக்கப்பட்ட சைபுனிஷா உள்ளிட்டோர் மனு மீது மீண்டும் இன்று பிற்பகல் விசாரணை நடைபெற்றது. சைபுனிஷா உள்ளிட்ட 4 பேருக்கும் சரணடைய 4 வார கால அவகாசம் அளித்தது உச்சநீதிமன்றம்.

தற்போது சஞ்சய்தத் உட்பட 8 பேர் நீதிமன்றத்தில் சரணடைய கால அவகாசம் பெற்றுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+