இந்தியாவில் 6 புதிய விசா விண்ணப்ப மையங்களை திறக்கிறது பெல்ஜியம்
டெல்லி: இந்தியாவில் 6 புதிய விசா விண்ணப்ப மையங்களை திறக்க பெல்ஜியம் அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் பெல்ஜியம் நாட்டின் விசா விண்ணப்ப மையங்கள் டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரில் உள்ளன. தற்போது மேலும் 6 இடங்களில் விசா விண்ணப்ப மையங்களை விரைவில் திறக்க பெல்ஜியம் அரசு முடிவு செய்துள்ளது.
வட இந்தியாவில் சண்டிகர், கொல்கத்தாவில் இந்த மையங்கள் திறக்கப்பட உள்ளன. தென்னிந்தியாவில் சென்னை, ஐதராபாத்திலும், மேற்கு பகுதியில் அமகதாபாத் மற்றும் புனே ஆகிய நகரங்களிலும் இந்த மையங்கள் வர உள்ளன. இதன்மூலம் பெல்ஜியம் நாட்டின் விசா விண்ணப்ப மையம் 9 ஆக உயரும்.
பெல்ஜியம் நாட்டிற்கு வரும் பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு, விசா விண்ணப்ப தாரர்களுக்கு புதிய சேவைகள், வசதிகளை வழங்குவதற்காகவும், சுற்றுலா, வர்த்தகம், முதலீடு மற்றும் இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பெல்ஜியம் தூதரகத்தின் வர்த்தக பங்குதாரரான வி.எப்.எஸ்.குளோபல் தெரிவித்துள்ளது












Click it and Unblock the Notifications